மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி

Bookmark and Share

மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி

இந்திய சினிமாவை மட்டுமில்லாமல் உலக சினிமாவையே மூக்கின் மேல் கை வைக்க வைத்த படம் தான் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி. இரு பாகங்களாக வெளிவந்த இப்படம் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. குறிப்பாக முதல் பாகம் முதலில் யாராலும் கவனிக்கப்படவில்லை.

அதை அதன் இசை வெளியீட்டு விழாவினை பார்த்தால் தெரியும் . இத்தகைய மாபெரும் படைப்பின் தொடர்ச்சி மீண்டும் நீளுமா என எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக ராஜமௌலி அடுத்த படமாக ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்-யை வைத்து ஒரு அரசியல் பின்னணி கொண்ட படத்தை எடுக்க சென்றுவிட்டார்.

ஆனால் தற்போது ஏமாந்த ரசிகர்களுக்கு குஷி அளிக்கும் விதமாக மீண்டும் பாகுபலி கதையை எடுக்க போகிறாரம், ராஜமௌலி. தொடர்ச்சி என்றால் கடைசி பாகத்தின் தொடர்ச்சியைத்தான் எடுப்பார்கள். ஆனால் இங்கே தான் ராஜமௌலி வித்தியாசம் காட்டுகிறார்.

அதாவது பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் ஏற்றிருந்த சிவகாமி மற்றும் கட்டப்பா கதாபாத்திரங்களின் முந்தைய கதையை கூறப் போகிறாராம். மேலும் ராஜமௌலியுடன் இணைந்து தேவகட்டா என்பவரும் இயக்கவுள்ள இப்படம் மூன்று பாகங்களாக உருவாகிறதாம்.

இதனால் எப்படியோ 6,7 வருஷத்துக்கு உற்சாகத்தில் திளைக்கப் போகிறோம் என்பது மட்டும் உறுதி.


Post your comment





Related News
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்
பாகுபலி-2வில் குழந்தையை தூக்கும் காட்சியை கவணித்தீர்களா- எதை சொல்ல வருகிறது?
ஒரு பகுதியில் மட்டும் 50 கோடிக்கு விலைபோன பாகுபலி 2!
1 கோடி முறை பார்க்கப்பட்ட பாகுபலி டிரைலர்
\'பாகுபலி\' - பிரமிக்க வைக்க வியாபாரக் கணக்கு
ஹாலிவுட் தரத்தில் படங்கள் எடுக்க முடியும்: சூர்யா
தமன்னாவின் பாகுபாலி பில்டப்!
பாகுபலி டிரைலரை வெளியிடும் சூர்யா
ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பாகுபலி ஆடியோ ரிலீஸ்..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions