'பாகுபலி' - பிரமிக்க வைக்க வியாபாரக் கணக்கு

Bookmark and Share

'பாகுபலி' -  பிரமிக்க வைக்க வியாபாரக் கணக்கு

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட கனவுப் படைப்பான 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்குமான மொத்த செலவு 250 கோடி ரூபாய் என டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். முதலில் இந்தப் படத்தின் மொத்த செலவு 150 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால், சென்னையில் நடைபெற்ற 'பாகுபலி' டிரைலர் வெளியீட்டில் இயக்குனர் ராஜமௌலி இரண்டு பாகங்களையும் முடிக்க 250 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவித்ததாக டோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மேடையில் ராஜமௌலி படத்தின் செலவு பற்றி எதுவுமே பேசவில்லை.

இருந்தாலும் டோலிவுட்டில் அப்படி ஒரு செய்தி பரவிக் கிடக்கிறது. 250 கோடி ரூபாய் என்பது இந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை மிகப் பெரும் பட்ஜெட் ஆகும். அதிலும், இது ஒரு தென்னிந்தியத் திரைப்படம், தமிழ், தெலுங்கில் மட்டுமே நேரடியாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஜுலையில் வெளியாக உள்ள இந்தப் படத்தைப் பற்றி இப்போதே எவ்வளவு வியாபாரம் நடக்கும் என்ற பேச்சு ஆரம்பமாகிவிட்டது. 'பாகுபலி' படத்தின் முதல் பாகம், தெலுங்கு தியேட்டர்கள் உரிமை மட்டும் சுமார் 50 கோடிக்கும், தமிழ் தியேட்டர்கள் உரிமை சுமார் 30 கோடிக்கும், ஹிந்திய உரிமை 60 கோடிக்கும், மற்ற இந்திய மொழிகளின் உரிமை 50 கோடிக்கும் போனால், மொத்தமாக 190 கோடி ரூபாய் ஒரே ஒரு பாகத்திலேயே வந்து விடும்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமைகள் 60 கோடி ரூபாய் என்றால் கூட  மொத்தமாக முதல் பாகத்தின் வியாபாரம் 250 கோடி ரூபாயைத் தொட்டு விடும் என்கிறார்கள். மேலே சொன்ன கணக்கு பிரம்மாண்டமான பெரிய நட்சத்திரங்கள் நடித்த படத்திற்கான சராசரி கணக்கு என்கிறார்கள்.

முதல் பாகத்தின் வியாபாரத்திலேயே போட்ட முதலீட்டை எடுத்து விட்டால், இரண்டாம் பாகம் வியாபாரம் முழுவதும் கூடுதல் வருமானம்தான்.

ராஜமௌலி இந்தப் படத்தின் வியாபாரத்தை மிகத் திறமையாக நடத்தி விடுவார் என்று இப்போதே டோலிவுட்டில் பெரிய கணக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

 


Post your comment





Related News
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
27 மாநிலங்களில் சாதனை, ஒரு மாநிலத்தில் மட்டும் சோதனை- பாகுபலி-2விற்கு அந்த பெருமை கிடைக்குமா?
மீண்டும் ராஜமவுலி உடன் இணையும் பிரபாஸ்
கேரளாவை அதிர வைத்த பாகுபலி-2 வசூல்- ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
பாகுபலி 2 படக்குழுவினரின் அடுத்த டார்க்கெட் இதுதானாம்
கேரளாவில் பாகுபலி 2 படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
அரபு நாடுகளில் இருந்து பாகுபலி நீக்கம்! காரணம் இதுதான்
பாகுபலி-2விற்கு பாக்ஸ் ஆபிஸில் விழுந்த முதல் அடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions