பைரவாவுக்கு டிக்கெட் கிடைக்கலைன்னா என் படத்துக்கு வாங்க – சாந்தனு உருக்கம்!

Bookmark and Share

பைரவாவுக்கு டிக்கெட் கிடைக்கலைன்னா என் படத்துக்கு வாங்க – சாந்தனு  உருக்கம்!

நடிகர், இயக்குனர் பார்த்திபன் இயக்கியுள்ள கோடிட்ட இடங்களை நிரப்புக படம் நாளை மறுநாள் வெளியாவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தை ஜனவரி 12-ல் வெளியிட பார்த்திபன் திட்டமிட்டுள்ளார்.

அதேநாளில் விஜய்யின் பைரவா படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு, விஜய்க்கு எதிராக படம் வெளியிடுவதால் அவர்மீது விமர்சனம் எழுந்தது.

ஆனால் நிதானமாக இதற்கு பதிலளித்த சாந்தனு, ” என்னை விஜய் அண்ணாவுடன் ஒப்பிடாதீர்கள். அவர் படத்துக்கு டிக்கெட் கிடைக்கலைன்னா என் படத்துக்கு வாங்க” என ட்வீட் செய்துள்ளார்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions