விஜய்யின் பைரவா படத்தை நடிகர் பார்த்திபன் கிண்டல் செய்கிறாரா?

Bookmark and Share

விஜய்யின் பைரவா படத்தை நடிகர் பார்த்திபன் கிண்டல் செய்கிறாரா?

பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக படம் இன்று வெளியாக இருக்கிறது. ஒருபக்கம் விஜய்யின் பைரவா படமும் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தன் படத்தை விளம்பரம் செய்யும் வகையில் வித்தியாசமான வாசகங்களை எழுதி விளம்பரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் போஸ்டரில் ஒரு பை - ரவாவில் 100 பேருக்கு கேசரி கிண்டலாம் - அதில் ரவையூண்டு சிதறினாலே கோடி எறும்பு உண்ணலாம்! Let's celebrate என்று ஒரு வசனம் இருக்கிறது.

ஏற்கெனவே சில நடிகரின் ரசிகர்கள் பை ரவா (buy rava) என்ற அர்த்தத்தில் கிண்டல் செய்தனர். இந்நிலையில் பார்த்திபன் இப்படி போட்டிருப்பது விஜய் ரசிகர்களை மிகவும் கஷ்டப்படுத்தியுள்ளது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions