பைரவா எல்லா பாடல் வரிகளும் இதோ!

Bookmark and Share

பைரவா எல்லா பாடல் வரிகளும் இதோ!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

மேலும் பாடல்கள் டிசம்பர் 23-ல் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்ப அதிர்ச்சியாக பாடல்கள் நேற்றே ஐ டியூன்ஸில் வெளியாகிவிட்டது. எல்லா பாடல் வரிகளும் இதோ:

பட்டையக் கிளப்பு:

பட்டையக் கெளப்புகுட்டையக் குழப்புபட்டையக் கெளப்புபட்டி தொட்டி எல்லாம்பட்டையக் கெளப்பு
 
குரவ மீனப் புடிக்கக்குட்டையக் குழப்பு
கட்டுக் கட்டா – சேத்தநோட்டுக் கட்டு – பெரும்பூட்டுப் போட்டுக் கெடக்கு
 
பறவைக் கெல்லாம்ஒரு வங்கி இல்ல – அதுபட்டினியா கெடக்கு?
**காசை எடுகாத்தும் திசையை மாத்தும்காசை எடு
 
ஓ… கடலில் ரயிலும் போகும்காசை எடு
இமயம்கொஞ்சம் குனியும்காசை எடு
 
பூட்டி வச்சு என்ன பண்ணப் போற? … ஓஅள்ளிக் கொடு – இல்லஆட்டம் போடு
 
சிங்கம் எல்லாம்சேமிக்காதுஜில்லென்று கொண்டாடு
 
கட்டு கட்டாச் – சேத்தநோட்டுக் கட்டு – பெரும்பூட்டு போட்டுக் கெடக்கு
 
பறவைக் கெல்லாம் – ஒருவங்கி இல்ல – அதுபட்டினியா கெடக்கு?**வாழணுமேஏழை பாளை நம்மைவாழ்த்தணுமே
எதிரி வந்தால்மோதிப் பாக்கணுமே
 
ஏய்க்கும் கூட்டம் என்றால்சாய்க்கணுமே
நீதி கேட்டு – தம்பிநீயே நில்லு
 
தப்பாதப்பாவிஜயன் வில்லு
ரெண்டாயிரம் – ஆண்டாவாழப்போற? – சும்மாபூட்டிவச்சு எதுக்கு?
 
பறவைக் கெல்லாம் – ஒருவங்கி இல்ல – அதுபட்டினியா கெடக்கு?

2. நில்லாயோ:

மஞ்சள் மேகம் – ஒருமஞ்சள் மேகம் – சிறுபெண்ணாகி முன்னே போகும்
 
பதறும் உடலும் – என்கதறும் உயிரும் – அவள்பேர்கேட்டுப் பின்னே போகும்
 
செல்லப் பூவே – நான்உன்னைக் கண்டேன்சில்லுச் சில்லாய் – உயிர்சிதறக் கண்டேன்
 
நில்லாயோ நில்லாயோஉன்பேர் என்னஉன்னாலே மறந்தேனேஎன்பேர் என்ன
*
கனவா கனவா – நான்காண்பது கனவா – என்கண்முன்னே கடவுள் துகளா
 
காற்றின் உடலா – கம்பன்கவிதை மடலா – இவள்தென்னாட்டின் நான்காம் கடலா
சிலிக்கான் சிலையோசிறுவாய் மலரோவெள்ளை நதியோவெளியூர் நிலவோ
 
நில்லாயோ நில்லாயோஉன்பேர் என்னஉன்னாலே மறந்தேனேஎன்பேர் என்ன
*
செம்பொன் சிலையோ – இவள்ஐம்பொன் அழகோபிரம்மன் மகளோ – இவள்பெண்பால் வெயிலோ
 
நான் உன்னைப் போன்றபெண்ணைக் கண்டதில்லைஎன் உயிரில் பாதியாரும் கொன்றதில்லை
 
முன்னழகால் முட்டிமோட்சம் கொடு – இல்லைபின் முடியால்என்னைத் தூக்கிலிடு

3. அழகிய சூடானே பூவே:

பூ பூபுன்னகையில் நீபுரோட்டீன் தருவாய்
வா வாவார்த்தைகளால் நீவைட்டமின் தருவாய்
 
நீயோசாதனைச் செல்வன் – பெண்ணின்கண்களின் கள்வன் – நீகாதலின் கொம்பன் – ஆனால்கடவுளின் நண்பன் – உந்தன்வேகமே கண்டேன் – நீயோமின்னலின் பிள்ளை – அடமின்னலை வெட்ட – ஒருவெட்டுக் கத்தி இல்லையே
 
அழகிய சூடான பூவே – என்சொந்தமான தீவேஉன்னைப் பார்த்த போதே – என்உயரம் கூடிப் போனேன்
 
இதுவரை காணாத பெண்ணே – இலக்கியக்கவிதை காட்டும் கண்ணே – உனைதோள்மீது ஏற்றி – புதுகோள்கொண்டு சேர்ப்பேன்*தொடத் தூண்டுதே தூண்டுதே – நிலாஉனைத் தீண்டினால் ஏனடி தடா
 
என் நெஞ்சிலே முட்டுதே கிடாஎன் அச்சமும் நாணமும் விடா
வெள்ளைப் பொன் மேனியைகொள்ளை கொள்ளப் போகிறேன்மெல்லப் போய் தீண்டினால் – நானேகொள்ளை போகிறேன்
 
முன்னே நீ வந்ததும்முதுகுத் தண்டில் மழையடாஇன்பத் தலைவா இடைதொடஇடைவெளி ஏன் – உன் அணைப்பினில்நரம்புகள் நொறுங்கட்டும்*
எனை மத்தளம் மத்தளம் அடிஇதழ் புத்தகம் புத்தகம் படி
விழும் முத்தமோ முத்தமோ இடிஅதை மொத்தமாய்த் தாங்குமோ கொடி
 
நாட்டுக்குள் வன்முறை வேண்டாம்என்பது உண்மையேகட்டில்மேல் வன்முறை வேண்டும்என்பது பெண்மையே
இன்பம் போல் ஒரு துன்பமாதுன்பம் போல் ஒரு இன்பமா
 
ஏழேழ் பிறவியின் சுகங்களைஇன்றே வழங்கிடுஉயிரைத் தட்டித் தட்டித் திறந்திடு

4. பாப்பா பாப்பா:

பாப்பா பாப்பாபப்பரப் பப்பா – சும்மாவாப்பா வாப்பாவந்தாடப்பா – நான்ஒன் ஆளப்பா
 
டாப்பா டாப்பாடான்ஸாடப்பா – இன்னும்டீப்பா டீப்பாலவ் பண்ணப்பா – நீஎன் ஆளப்பா
 
அன்பு கொடுத்தா – சொந்தஆவி கொடுப்பேன் – சும்மாவம்பு வளத்தா – அடஆவி எடுப்பேண்டாகத்தி எடுத்து – புத்திதீட்டி முடிப்பேன் – பகைகொத்தி முடிப்பேன்
 
எங்காளப்பா – நீஎங்காளப்பா – இங்கஎல்லாருமே – இனிஒங்காளப்பா
 
கெட்டவனவெட்டிச் சாய்க்கவந்த – புதுக்கட்ட பொம்மன் நீயா*நரிக நாட்டாமைநடத்தும் உள்ளூரில்புயல்போல் வந்தாயே புலியே புலியே
 
அறிவு ஒருகையில்அருவா மறுகையில்அதுதான் என்பாணி கிளியே கிளியேஊருக்குப் பத்துப்பேர்ஒம்போல வந்தாலேயாருக்கும் தீங்கில்லவெற்றிச் செல்வா வா வா
 
பொது எதிரி யாருங்கபோராடிப் பாருங்கவேரோட வீழ்த்துங்கஉறுதி எடுங்க உருமி அடிங்க*கிழக்கே இல்லாமதிசைகள் மூணாச்சுஎமக்கு நீதானே கிழக்கு கிழக்கு
 
வெளிச்சம் வருமட்டும்கிழக்கும் கறுப்புத்தான்இருட்டத் தீ வச்சுக் கொளுத்து கொளுத்து
ஒரு வார்த்த சொன்னாலேஊரே ஒம் பின்னாலேநீவாய்யா முன்னாலேயுத்தம் செய்ய வா வா
 
யுத்தங்கள் இல்லாமஇதிகாசம் நிக்காதுரத்தங்கள் சிந்தாமஉலகத் தீமை ஒழிவதேது?


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions