பைரவா பாடல் மொக்கையா? கொந்தளித்த பாடகர்!

Bookmark and Share

பைரவா பாடல் மொக்கையா? கொந்தளித்த பாடகர்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

மேலும் பாடல்கள் டிசம்பர் 23-ல் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இன்ப அதிர்ச்சியாக பாடல்கள் நேற்றே ஐ டியூன்ஸில் வெளியாகிவிட்டது. சந்தோஷ் நாராயணன் – விஜய் கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால் பாடல்கள் விஜய் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்தியுள்ளது. பொதுவான ரசிகர்களிடம் பாடல்கள் கலவையான விமர்சனத்தையே சந்தித்துள்ளது. இந்நிலையில் ஒரு பிரபல விமர்சகர் டிவிட்டரில், ” பைரவா அறிமுக பாடல் சிறப்பாக இல்லை. அருண்ராஜா பொருத்தமான தேர்வு இல்லை” என கூறியிருந்தார். இதைக்கண்டு கடுப்பான அருண்ராஜா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions