பொங்கல் ஸ்பெஷல்.... பைரவாவுடன் மோதும் படங்கள்.. ஒரு பார்வை!

Bookmark and Share

பொங்கல் ஸ்பெஷல்.... பைரவாவுடன் மோதும் படங்கள்.. ஒரு பார்வை!

நாளை மறு நாள் பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் பைரவா வெளியாகிறது. இந்தப் படத்துடன் மோத மேலும் ஒரு படம் தயாராகி வருகிறது. ஆரம்பத்தில் பொங்கல் ஸ்பெஷலாக பைரவா மற்றும் 7 புதுப் படங்கள் வெளியாகவிருந்தன.

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, ஜிவி பிரகாஷின் புரூஸ்லீ போன்ற படங்கள் இந்தப் பட்டியலில் இருந்தன.ஆனால் திடீரென இந்தப் பட்டியலிலிருந்து பெரும்பாலான படங்கள் விலக, பைரவா, புரியாத புதிர், கோடிட்ட இடங்களை நிரப்புக ஆகிய மூன்று படங்கள் மட்டுமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த ரேசில் புதிதாக சேர்ந்துள்ளது இன்னொரு படம். அது சாயா. விஎஸ் பழனிவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சோனியா அகர்வால் போலீசாக நடித்துள்ளார். தயாரிப்பாளரும் இவர்தான். ஆக இந்த பொங்கல் வாரத்தில் பைரவாவுடன் புரியாத புதிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, சாயா படங்கள் மோதுகின்றன.இவற்றை விட முக்கியம், சிரஞ்சீவியின் மறுவருகைப் படமான கைதி நெம் 150. தமிழ்ப் படத்துக்கு நிகரான முக்கியத்துவத்துடன் நாளை வெளியாகிறது.


Post your comment





Related News
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்
மலேசியா ஓகே, அமெரிக்காவில் பெரும் நஷ்டம்- பைரவா வசூல் விவரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions