பைரவா வசூலைப் பதம் பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டம்!

Bookmark and Share

பைரவா வசூலைப் பதம் பார்த்த ஜல்லிக்கட்டு போராட்டம்!

எந்த ராஜா எந்தப் பட்டணம் போனா என்ன... சினிமா வசூல் அது பாட்டுக்கு வந்துரும் என்பதுதான் சில ஆண்டுகள் வரை நிலைமை. ஆனால் இன்று அப்படியே தலைகீழாகிவிட்டது.

தமிழகத்தில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், சினிமாவை தூக்கிப் போட்டுவிட்டு மக்கள் ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள். அட, சினிமாக்காரர்களே ஓடி வந்துவிடுகிறார்களே...கடந்த ஒரு வார காலமாக நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம், இந்த பொங்கலுக்கு வெளியான விஜய்யின் பைரவா படத்தைப் பதம் பார்த்துவிட்டது.

கிட்டத்தட்ட 55 நாடுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்பட்டதாக கூறப்பட்ட விஜய்யின் பைரவா படம், முதல் நாளில் ரூ.16 கோடியைத் தொட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் படம் வெளியான 5 வது நாளே ஜல்லிக்கட்டுப் போராட்டங்கள் உச்சத்தைத் தொட்டன. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பைரவா வசூல் பாதிக்கப்பட்டது.

இரண்டாவது வாரத்தில் மொத்தம் ரூ 55 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் படம் முதல் வாரமே 100 கோடியை அள்ளியதாக விநியோகஸ்தர் தரப்பில் விளம்பரம் தரப்பட்டது நினைவிருக்கலாம். 


Post your comment





Related News
வரலாம் வரலாம் வா பைரவா- அதிரடி கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்
பைரவா செம்ம வசூல், ஆதாரத்துடன் வெளிவந்த தகவல்
மும்பையில் தொலைக்காட்சியில் விஜய்யின் பைரவா- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்
பைரவா வசூலை முறியடித்த S3- வசூல் விவரம் முழுவதும்
இளையதளபதிக்கு நன்றி தெரிவித்த பிரபல நடிகர்- அப்படி என்ன நடந்தது?
சென்னையில் இதுவரை விஜய்யின் பைரவா வசூல் எவ்வளவு தெரியுமா?
பைரவா வசூலை முறியடித்த சிங்கம்-3
செங்கல்பட்டு ஏரியாவில் இத்தனை கோடி வசூலா பைரவா?
பைரவா 18 நாள் தமிழக வசூல் இதோ- லாபத்தை எட்டியதா?
பைரவாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- மீண்டும் ரசிகர்கள் உற்சாகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions