பஜிராவோ மஸ்தாணி படத்தை எதிர்ப்பு பாஜகவினர் ரகளை!

Bookmark and Share

பஜிராவோ மஸ்தாணி படத்தை எதிர்ப்பு பாஜகவினர் ரகளை!

பஜிராவோ மஸ்தானி, தில்வாலே, தங்க மகன் என மூன்று பெரும் நட்சத்திரங்களின் படங்கள் இன்று வெளிவந்து, எதைப் பார்ப்பது என்ற குழப்பத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

இதில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி, திரைக்கு வந்திருக்கும் படமான பஜிரோ மஸ்தானி பார்க்க முடியுமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரன்வீர் சிங், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், 1700 களில் வாழ்ந்த மராத்திய மன்னர் பேஷ்வா என்பவரின் கதையைக் கூறும் வரலாற்றுப் படம். இப்படம் பாகுபலிக்கு இணையாகக் கூட கூறப்பட்ட நிலையில் படத்துக்கு தற்போது பிரச்னைகள் கிளம்பியுள்ளன.

இன்று இந்தியா முழுவதிலும் வெளியாகிய இத்திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியினர், புனேவில் உள்ள மல்டி பிளக்ஸ் திரையங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இன்று நடைபெறவிருந்த ஐந்து காட்சிகளையும் அத்திரையரங்கம் ரத்து செய்துள்ளது.

மராத்திய மன்னர் பேஷ்வா, குறித்த தவறான செய்திகள் இப்படத்தில் உள்ளதாகவும், மேலும் அவர் மிகவும் பொறுப்பானவர், போர்க் காலங்களில் தனது உணவைக் கூட குதிரையிலேயே அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு மிகவும் பற்றுடன் இருந்தவர். 

இப்படத்தில் அவரை சித்தரித்துள்ளது போல், அவருக்கு தனது கூந்தலை பின்னி போடுவதும், ஆடிப்பாடுவதும் அவர் செய்ததில்லை, மேலும் பேஷ்வாவின் மனைவியாக வரும் பிரியங்காவின் உடை, அணிகலன்கள் போன்று அக்காலத்தில் செல்வம் செழித்தவர்களாகவும் அவர்கள் வாழவில்லை.

இது வரலாற்றைத் திரிக்கும் வகையில் உள்ளது எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக இப்படத்தின் ’பிங்கா’ பாடல் வெளியான போதே பேஷ்வா மன்னர் குடும்பத்தின் சந்ததியினர், அதற்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். படத்தில் அவ்வாறு வரும் பகுதிகளை நீக்க வேண்டும், இல்லையெனில் படத்தின் பெயரை மாற்றியமைக்க வேண்டுமென தற்போது பாரதீய ஜனதா கட்சியினர் கூறியுள்ளனர்.

பஜிராவோ மஸ்தாணி படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் படக்குழுவினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions