பாகிஸ்தான் சென்சாரிடமும் பாஸ் மார்க் வாங்கிய பஜ்ரங்கி பாய்ஜான்

Bookmark and Share

பாகிஸ்தான் சென்சாரிடமும் பாஸ் மார்க் வாங்கிய பஜ்ரங்கி பாய்ஜான்

சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'பஜ்ரங்கி பாய்ஜான்' வழக்கம்போல சல்மான் ரசிகர்களை கவர்ந்துவிட்டது. பாகிஸ்தானிலிருந்து ஒரு குழந்தையை காப்பாற்றி இந்தியாவில் இருக்கும் அவளது பெற்றோரிடம் சேர்க்க முயற்சிப்பதே 'பஜ்ரங்கி பாய்ஜான்' திரைப்படக் கதையின் மையக்கரு. 

பாகிஸ்தானின் சிந்து சென்சார் போர்ட் அதிகாரி செய்த டுவீட்டில், 'வெகு நாட்களுக்கு பிறகு பாகிஸ்தானை நல்ல விதத்தில் காண்பித்திருக்கிற திரைப்படம் இது' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த திரைப்படம் பாகிஸ்தான் சென்சார் போர்டில் பாஸ் செய்ததற்கு சல்மான் கான் நன்றி தெரிவித்திருந்தார். 

மேலும், 'பஜ்ரங்கி பாய்ஜான்' திரைப்படம் குழந்தைகளின் மீது பாசம் காண்பிக்க வேண்டியதை குறித்த படம், எனவே எவ்வித கட்டுபாடுகளும் இன்றி அனைவரும் இதை பார்க்க வேண்டும்' என்று சல்மான் குறிப்பிட்டுள்ளார். 

எனினும், இந்த திரைப்படத்தின் சில காட்சிகளும், சில வசனங்களும் சிந்து சென்சார் போர்டால் 'கட்' செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Post your comment





Related News
வசூலில் சக்கைப்போடு போடும் பஜ்ரங்கி பைஜான்
சல்மான் படத்தின் வசூலை சயீப் படம் மிஞ்சும் : கரீனா
பாகிஸ்தானிலும் வரவேற்பு பெற்ற பஜ்ரங்கி பைஜான்
பஜ்ரங்கி பைஜான் மலையாளப் படத்தின் இன்ஸ்பிரேஷன் ?
லிங்காவால் சல்மானுக்கு ரெட்!
பிரான்சில் வெளியாகும் சல்மான் படம்
தயாரிப்பாளர் ஆனது ஏன்? சல்மான் பதில்
பஜ்ரங்கி பைஜான் டிரைலர் விரைவில் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions