பஜ்ரங்கி பைஜான் மலையாளப் படத்தின் இன்ஸ்பிரேஷன் ?

Bookmark and Share

பஜ்ரங்கி பைஜான்  மலையாளப் படத்தின் இன்ஸ்பிரேஷன் ?

மோகன்லால் நடித்த  த்ரிஷ்யம்  திரைப்படம் எப்படி மலையாளத்திலிருந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என ரீமேக் செய்யப்பட்டதோ, அதே போல ஃபாசில் இயக்கி 1986ம் ஆண்டு வெளிவந்த   பூவின்னு புதிய பூந்தென்னல்  என்ற திரைப்படம் தமிழில்  பூ விழி வாசலிலே  எனவும், தெலுங்கில்  பசிவாடி பிரணம்  எனவும், ஹிந்தியில்  ஹாத்யா  எனவும் ரீமேக் செய்யப்பட்டது. மலையாளத்தில் மம்முட்டி, தமிழில் சத்யராஜ், தெலுங்கில் சிரஞ்சீவி, ஹிந்தியில் கோவிந்தா ஆகியோர் ஹீரோக்களாக நடித்திருந்தனர்.

தெலுங்கில் வெளிவந்த  பசிவாடி பிரணம்  படத்தால் ஈர்க்கப்பட்டுதான் தற்போது வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும்  பஜ்ரங்கி பைஜான்  படத்தின் கதையை எழுதியதாக கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் சமீபத்தில் தெரிவித்துள்ளார். “1987ம் ஆண்டு வெளிவந்த  பசிவாடி பிரணம்  என்னை மிகவும் கவர்ந்த படம். அந்தக் கதைக்கு கொஞ்சம் புத்துணர்வு கொடுத்து இந்தக் காலத்திற்கேற்றபடி மாற்ற வேண்டும் என நினைத்தேன்.

அதே போல பாகிஸ்தானிய தம்பதிகள் தங்களது மகளின் இதய அறுவை சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வந்ததைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தேன். இந்திய மக்கள் அவர்கள் மீது அன்பு செலுத்தியதைப் பற்றி அந்தத் தம்பதியினர் பெருமையாகப் பேசியிருந்தனர்.

அதுதான் என்னை யோசிக்க வைத்தது. அதன் பின்தான் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் வாழும் மக்களை இணைக்கும் வகையில் இந்தக் கதையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்,” என்று கூறியிருக்கிறார்.

நமது பழைய படங்களிலிருந்தே எத்தனையோ புதிய கதைகளை உருவாக்கலாம் என்பதை விஜயேந்திர பிரசாத் இன்றைய இளம் படைப்பாளிகளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

அப்புறம் ஏன் ஹாலிவுட் படங்களையும், கொரியன் படங்களையும் சில இயக்குனர்கள் காப்பியடிக்க வேண்டும். பழைய படங்களின் டிவிடிக்களைத் தேடிப் பிடித்துப் பார்த்தாலே போதுமே...! 

 


Post your comment





Related News
வசூலில் சக்கைப்போடு போடும் பஜ்ரங்கி பைஜான்
சல்மான் படத்தின் வசூலை சயீப் படம் மிஞ்சும் : கரீனா
பாகிஸ்தானிலும் வரவேற்பு பெற்ற பஜ்ரங்கி பைஜான்
பாகிஸ்தான் சென்சாரிடமும் பாஸ் மார்க் வாங்கிய பஜ்ரங்கி பாய்ஜான்
லிங்காவால் சல்மானுக்கு ரெட்!
பிரான்சில் வெளியாகும் சல்மான் படம்
தயாரிப்பாளர் ஆனது ஏன்? சல்மான் பதில்
பஜ்ரங்கி பைஜான் டிரைலர் விரைவில் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions