பாகிஸ்தானிலும் வரவேற்பு பெற்ற பஜ்ரங்கி பைஜான்

Bookmark and Share

பாகிஸ்தானிலும் வரவேற்பு பெற்ற பஜ்ரங்கி பைஜான்

சல்மான் கான், கரீனா கபூர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த பஜ்ரங்கி பைஜான் இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

அங்கு இந்தப் படத்தை வெளியிட நிறையவே தடை ஏற்பட்டதாம். அனைத்தையும் மீறி வெளியான படம் கராச்சி, இஸ்லாமாபாத்  உட்பட முக்கியமான நகரங்களில் பாகிஸ்தானிய படங்களை விட அதிகமான வசூலைப் பெற்று முன்னணியில் உள்ளதாக பாகிஸ்தானின்  முன்னணி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிர ஆஞ்சநேய பக்தரான சல்மான் கானிடம் தஞ்சமடையும் வாய் பேச முடியாத, காது கேளாத ஒரு பாகிஸ்தானிய சிறுமியை அவளுடைய சொந்த ஊருக்குக் கொண்டு போய் சேர்க்கும் முயற்சியில் சல்மான் ஈடுபடுவதுதான் படத்தின் கதை.

எல்லைகளைத் தாண்டியும் இந்தப் படம் பாகிஸ்தானிய மக்களுக்கும் மிகவும் பிடித்துப் போயுள்ளதாம். இந்திய ரூபாய் மதிப்பில் கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் சுமார் 30 லட்ச ரூபாய் வசூலித்துள்ளதாம்.

பாகிஸ்தானிய உள்ளூர் படங்களான பின் ரோயே, ராங் நம்பர் ஆகிய படங்களை விட பஜ்ரங்கி பைஜான் படத்தின் வசூல் அதிகமாக இருந்துள்ளது.  பாகிஸ்தானிய ரசிகர்களுக்கு எப்போது ஹிந்திப் படங்களின் மீதுதான் மோகம் அதிகம்.

சல்மான் கானுக்கு அங்கு மிகப் பெரும் ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்தப் படம் அங்கும் பல சாதனைகளைப் புரியும் என பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.


Post your comment





Related News
வசூலில் சக்கைப்போடு போடும் பஜ்ரங்கி பைஜான்
சல்மான் படத்தின் வசூலை சயீப் படம் மிஞ்சும் : கரீனா
பஜ்ரங்கி பைஜான் மலையாளப் படத்தின் இன்ஸ்பிரேஷன் ?
பாகிஸ்தான் சென்சாரிடமும் பாஸ் மார்க் வாங்கிய பஜ்ரங்கி பாய்ஜான்
லிங்காவால் சல்மானுக்கு ரெட்!
பிரான்சில் வெளியாகும் சல்மான் படம்
தயாரிப்பாளர் ஆனது ஏன்? சல்மான் பதில்
பஜ்ரங்கி பைஜான் டிரைலர் விரைவில் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions