தயாரிப்பாளர் ஆனது ஏன்? சல்மான் பதில்

Bookmark and Share

தயாரிப்பாளர் ஆனது ஏன்? சல்மான் பதில்

பஜ்ரங்கி பைஜான் படத்தின் மூலம், நடிகர் சல்மான் கான் தயாரிப்பாளராக, பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். தான் தயாரிப்பாளர் ஆனது ஏன் மற்றும் எப்படி என்பது குறித்த கேள்விகளுக்கு, பஜ்ரங்கி பைஜான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சல்மான் கான் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது,  பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது., இந்த படத்தை, இயக்குநர் கபீர் கான் தான் இயக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்த நிலையில், தயாரிப்பாளர் யார் என்ற கேள்வி என் மனதிற்குள் எழுந்தது. 

அப்போது தான் கபீருடனான நட்பு நினைவிற்கு வந்தது. நாங்கள் இருவரும் ஏக் தா டைகர் படத்தின் மூலம் இணைந்தோம். அந்த படம், வசூலில் சாதனை படைத்தது. இந்த வெற்றி நிகழ்ச்சியில், டைகர் என்று சொன்னால், அது சல்மான் கான் மட்டுமே. அவரன்றி, வேறு யார் இந்த கேரக்டரில் நடித்திருந்தாலும், இந்தப்படம், இந்தளவிற்கு வெற்றி பெற்றிருக்காது என்று கூறியிருந்தார். அந்தளவிற்கு என்மேல் நம்பிக்கை வைத்திருந்தவர் கபீர் கான். பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், படத்தை, நாமே தயாரித்தால் என்ன என்ற கேள்வி தோன்றியது. நம் மேல் கபீர் வைத்துள்ள நம்பிக்கைக்கு பிரதிபலனாக, 

இந்த படத்தை, அவரை வைத்தே இயக்க முடிவு செய்தேன். மேலும் படத்தின் கதை அனைவருக்கும் பிடிக்கும் என்பதால், இந்த படத்தின் மூலம், தயாரிப்பாளர் ஆவதே, பாதுகாப்பு என்பதையையும் மனதில் கொண்டே, தயாரிப்பாளர் ஆனதாக சல்மான் கான் கூறினார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions