குற்றப்பரம்பரை பட விவகாரம்: பாரதிராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்த பாலா

Bookmark and Share

குற்றப்பரம்பரை பட விவகாரம்: பாரதிராஜாவுக்கு எச்சரிக்கை விடுத்த பாலா

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாரதிராஜா ‘குற்றப்பரம்பரை’ என்கிற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.

இந்த படம் ஆங்கிலேயர் காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை நாவலாக படித்து விட்டு படம் இயக்குகிறார் பாரதிராஜா. இதற்கிடையில் இந்த கதையை பாலாவும் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. 

இதைத்தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பாலா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

‘வேலா ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப்பரம்பரை’ நாவலை நான் படித்தேன். எனக்கு பிடித்தது. பாரதிராஜா இதை படமாக்க இருப்பதால் நாவலில் உள்ள சிறு பகுதியை வைத்து அந்த காலகட்டத்தில் வேறு படம் எடுக்க திட்டமிட்டேன்.

இதையறிந்த பாரதிராஜா, என்னிடம் போன் செய்து ‘குற்றப்பரம்பரை’ படத்தை இயக்க வேண்டாம். அது என்னுடைய கனவு படம். நான் எடுக்க போகிறேன்’ என்று கூறினார். 

மேலும் பத்திரிக்கைகளில் என்னைப்பற்றி தவறாக விமர்சித்திருக்கிறார் பாரதிராஜா. இதைக்கேட்டு நான் மிகவும் வருந்தினேன். ‘குற்றப்பரம்பரை’ என்பது ஒரு வரலாற்று சம்பவம். இதை யார் வேண்டுமானாலும் இயக்கலாம். அவர்மட்டும் தான் இயக்குவேன் என்று கூறுவது குழந்தை தனமாக இருக்கிறது. 

பாரதிராஜா வரலாற்றை படமாக எடுக்கிறார். நான் கதையை படமாக எடுக்க இருக்கிறேன். என் படத்திற்கும் பாரதிராஜா இயக்கும் படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 

இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்க இருக்கிறார். இரத்தின குமார் என்னை கதை திருடன் என்று கூறி இருக்கிறார். மேலும் அறிவு இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

பிதாமகன் படப்பிடிப்பின் போது பாரதிராஜாவை தரக்குறைவாக பேசியவர் இரத்தினகுமார். இன்று பாரதிராஜா பின்னாடி நின்று கொண்டு என்னை தவறாக பேசி வருகிறார். பொறுமையை இழந்துதான் தற்போது பேச வந்திருக்கிறேன்.

நான் பாரதி ராஜா, இரத்தினகுமார் இருவரையும் எச்சரிக்கிறேன். என்னைப்பற்றி இருவரும் தவறாக பேசினால், உங்களுக்கு நல்லது இல்லை’’ என்றார்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions