குற்றப்பரம்பரை பட விவகாரம்: டைரக்டர் பாலா மீது புகார்!

Bookmark and Share

குற்றப்பரம்பரை பட விவகாரம்:  டைரக்டர் பாலா மீது புகார்!

குற்றப்பரம்பரை கதையை படமாக்குவதில் டைரக்டர்கள் பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த கதைக்கு எழுத்தாளர்கள் ரத்னகுமார், வேல ராமமூர்த்தி ஆகிய இருவரும் உரிமை கொண்டாடுகிறார்கள்.

குற்றப்பரம்பரை கதையை படமாக்கவில்லை என்று பாலா மறுத்தார். பாரதிராஜாவும் ரத்னகுமாரும் தன்மீது அவதூறு பரப்பி வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்து எழுத்தாளரும் டைரக்டருமான ரத்னகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

‘‘குற்றப்பரம்பரை நான் எழுதிய கதை. பெருங்காம நல்லூர் துப்பாக்கி சூட்டில் என் தாத்தாவை இழந்ததால் இந்த கதையை எழுதி 1993-ல் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்தேன். பாரதிராஜா இதனை படமாக்க முன் வந்தார். சிவாஜி கணேசனும் சரத்குமாரும் நடிப்பதாக இருந்தது. இளையராஜா இசையில் ஒரு பாடலும் பதிவு செய்யப்பட்டது. 

பின்னர் சிவாஜிகணேசனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பட வேலைகள் நிறுத்தப்பட்டன. இந்த படத்தின் கதை விவாதத்தில் இருந்த வேல ராம மூர்த்தி எனது கதையை திருடி கூட்டாஞ்சோறு என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். பிறகு அதனை குற்றப்பரம்பரை என்ற பெயரில் மாற்றி மீண்டும் புத்தகமாக வெளியிட்டார். 

இந்த கதையைத்தான் பாலா படமாக்க முடிவு செய்தார். இதனை எதிர்த்ததால் பாலா என்னையும் பாரதிராஜாவையும் அவதூறாக பேசுகிறார். எச்சரிக்கையும் விடுக்கிறார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. டைரக்டர் பாலா மீது எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறேன்’’.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions