மனைவியை விவாகரத்து செய்ய நடிகர் பாலா முடிவு.?

Bookmark and Share

மனைவியை விவாகரத்து செய்ய நடிகர் பாலா முடிவு.?

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

தமிழில் எதிர்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையாமல் போனதால், மலையாள சினிமா பக்கம் சென்ற இவர் இப்போது அங்கே முன்னணி நடிகர்களுள் ஒருவராகவே மாறிவிட்டார். அத்துடன் ஹிட்லிஸ்ட் என்ற படத்தையும் இயக்கினார்.

இப்போது மனைவியை பாலா விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டு பாடகியான அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். அம்ருதா சுரேஷ் ஐடியா ஸ்டார் சிங்கர் மூலம் பிரபலமானவர்.

இவர்களுக்கு அவந்திகா என்கிற மூன்று வயது பெண் குழந்தையும் உண்டு. இப்போது சமீபத்தில் ஒரு நாளிதழுக்கு நடிகர் பாலா அளித்துள்ள பேட்டியில் விவாகரத்து கேட்க இருப்பதை உறுதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் இந்த மாத இறுதியில் விவாகரத்துக்கு மனு செய்யும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் பாலா இறங்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது..

ஆனால் சில நாட்களுக்கு முன்பு கூட பாலா தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக இணையதளத்தில் செய்தி ஓடியபோது, தயவுசெய்து இதுபோன்ற மற்றவர்களின் குடும்ப அந்தரங்கத்தில் நுழையாதீர்கள்.. எங்களை தனியாக விடுங்கள் என அப்போது அம்ருதா சுரேஷ் கூறியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்ததக்கது.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions