மனைவியுடன் விவாகரத்து முடிவில் நடிகர் -பாலா : நடந்தது என்ன?

Bookmark and Share

மனைவியுடன் விவாகரத்து முடிவில் நடிகர் -பாலா : நடந்தது என்ன?

சில நாட்களுக்கு முன்னர்தான் நடிகர் பாலா தனது மனைவியை விவாகரத்து பண்ண இருப்பதாக வந்த தகவல்களை வெளியிட்டோம். இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். தமிழில் எதிர்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையாமல் போனதால், மலையாள சினிமா பக்கம் சென்ற இவர், கடந்த 2010ஆம் ஆண்டு பாடகியான் அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். அம்ருதா சுரேஷ் ஐடியா ஸ்டார் சிங்கர் மூலம் பிரபலமானவர். இவர்களுக்கு அவந்திகா என்கிற மூன்று வயது பெண் குழந்தையும் உண்டு. 

நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்கள் மண வாழ்க்கையில், அம்ருதா தனியாக இசைக்குழு ஆரம்பித்தபின் தான் புயல் வீச தொடங்கியதாம். அதன்பின் சின்னசின்ன காரனங்களை சொல்லி, தனது தந்தை வீட்டிற்கு குழந்தை அவந்திகாவையும் அழைத்துக்கொண்டு போய்விட்டாராம் அம்ருதா. இந்த ஆறு மாதங்களில் மிகுந்த சிரமத்துக்கு இடையே, ஐந்து அல்லது ஆறு முறை மட்டுமே தனது மகளை சந்திக்க பாலாவால் முடிந்ததாம். 

தனது மகள் தன்னை விட்டும் தனது குடும்பத்தைவிட்டும் விலகி இருப்பதை தாங்கிக்கொள்ள இயலாத பாலா, இதற்கு முடிவுகட்டும் விதமாகத்தான் வரும் ஜூன் இறுதியில் அம்ருதாவை விவாகரத்து செய்ய மனு போட்ட உள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அம்ருதாவோ, நாங்கள் நன்றாகத்தான் குடும்பம் நடத்துகிறோம் என்றும், பாலா தவறாக புரிந்துகொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொல்லிவருகிறாராம்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
பொன்னம்பலத்திற்கு கிடைத்த பெரும் தண்டனை! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions