இயக்குனர் பாலாவுடன் மீண்டும் விஷால், ஆர்யா, அரவிந்தசாமி

Bookmark and Share

இயக்குனர் பாலாவுடன் மீண்டும் விஷால், ஆர்யா, அரவிந்தசாமி

பாலா தனது முதல் படத்திலேயே திறமையான டைரக்டர் என்ற அடையாளத்தை பதித்தார்.

‘சேது’ படம் வெற்றிகரமாக ஓடியதுடன், பரபரப்பாகவும் பேசப்பட்டது. அதில் நடித்த விக்ரம் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்தார். 

‘சேது’ படத்தை அடுத்து பாலா, சூர்யாவை வைத்து ‘நந்தா’ படத்தை இயக்கினார். இந்த படமும் வெற்றி பெற்றதுடன், தமிழ் பட உலகில் ஒரு புதிய மாற்றத்துக்கான கதவை திறந்து விட்டது. பாலா, முன்னணி டைரக்டர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.

அடுத்து அவர் டைரக்ஷனில் வெளிவந்த ‘பிதாமகன்,’ ‘நான் கடவுள்,’ ‘அவன் இவன்,’ ‘பரதேசி’ ஆகிய படங்கள் பாலாவை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றதுடன், இந்திய அளவில் அவரை பிரபலமாக்கின. 

தமிழ் பட உலகின் முதல் வரிசை டைரக்டர்களில் ஒருவராக இருக்கும் பாலா இப்போது, ‘தாரை தப்பட்டை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.

பொங்கல் விருந்தாக படம் திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து பாலா 5 கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்றை டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். இதில் விஷால், ஆர்யா, அரவிந்தசாமி, அதர்வா, ராணா ஆகிய ஐந்து பேரும் இணைந்து நடிக்கிறார்கள். 

படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் தொடங்குகிறது. இதற்கு முன்பு தமிழில், ‘கின்னஸ்’ சாதனைக்காக உருவான ‘சுயம்வரம்’ என்ற படத்தில் மட்டுமே பல கதாநாயகர்கள் இணைந்து நடித்து இருந்தார்கள்.

அதன் பிறகு 5 பிரபல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் படம் இதுதான். மிக பிரமாண்டமான முறையில் இந்த படம் தயாராகிறது.


Post your comment





Related News
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்
மிரட்டலுக்குப் பயமில்லை : ' டிராஃபிக் ராமசாமி ' திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!
பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள் -யார் தெரியுமா?
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
டிராபிக் ராமசாமி படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன் : பிரகாஷ் ராஜ் பெருமிதம் !
நடிகை அம்பிகாவின் கனவை நிறைவேற்றிய டிராபிக் ராமசாமி!
'டிராபிக் ராமசாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions