அதர்வாவுக்கு கைகொடுக்கும் பாலா!

Bookmark and Share

அதர்வாவுக்கு கைகொடுக்கும் பாலா!

பாலாவின் பரதேசி படத்துக்கு பிறகு அதர்வாவின் சினிமா பயணத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், அதற்கடுத்து அவர் நடித்து வெளியான படங்கள் வெற்றி பெறவில்லை.

அதனால் ஏறிய வேகத்திலேயே அவரது மார்க்கெட் இறங்கியது. அதனால், இரும்புக்குதிரை படத்தையடுத்து ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து அதர்வா நடித்து வந்த ஈட்டி படம் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகாமல் திரைக்கு வராமல் நின்று கொண்டிருக்கிறது.

அதேபோல், கணிதன் படமும் எப்போதோ முடிவடைந்தபோதும் வெளியாவதில் தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், அதர்வாவை வைத்து சண்டிவீரன் படத்தை இயக்கியுள்ள களவாணி சற்குணம் மட்டும் படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதில் முனைப்பு காட்டி வருகிறார்.

அந்த படத்தை தயாரித்திருப்பது டைரக்டர் பாலா என்பதால், அப்படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதனால் இந்த பரபரப்பை வைத்து அதர்வாவின் ஈட்டி, கணிதன் படங்களும் அடுத்தடுத்து வெளியாக தயாராகிக்கொண்டிருக்கிறது.

ஆக, பரதேசி படத்தில் அதர்வாவை நடிக்க வைத்து அவருக்கு திருப்புமுனை கொடுத்த டைரக்டர் பாலாவே, தற்போது அவரை வைத்து சண்டிவீரன் படத்தை தயாரித்தும் வீழ்ந்து கிடக்கும் அவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions