சத்யாவுக்கு 'எட்டுத்திக்கும்....' பெயரைக் கொடுக்குமா...?

Bookmark and Share

சத்யாவுக்கு 'எட்டுத்திக்கும்....' பெயரைக் கொடுக்குமா...?

நடிகர் ஆர்யா 'உள்ளம் கேட்குமே' படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக அறிமுகமாக அப்படியே சின்னச் சின்னப் படங்களில் நடித்து வந்தார். பாலாவின் பார்வை பட்டதும் 'நான் கடவுள்' படத்தில் மிரள வைக்கும் நடிப்பைக் கொடுத்து அப்படியே பத்து படிக்கட்டுக்கள் தாண்டி மேலே ஏறிவிட்டார்.

ஆர்யாவுக்கு ஒரு பாலா கிடைத்தது போல அவருடைய தம்பியான சத்யாவுக்கு இன்னும் எந்த பாலாவும் கிடைக்கவில்லை. அதனால், இன்னும் படிக்கட்டுக்களில் ஏறாமலே இருக்கிறார். 2013ம் ஆண்டு வெளிவந்த 'புத்தகம்' படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சத்யா.

அந்தப் படம் பலரின் விமர்சனப் பக்கங்களில் கூட இடம் பெறாமல் போய்விட்டது.  அடுத்து ஆர்யாவின் சொந்தத் தயாரிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'அமர காவியம்' படம் வெளிவந்தது.

படம் ஓரளவிற்கு நன்றாக இருந்தாலும், அது சத்யாவுக்கு எந்த திருப்பு முனையையும் ஏற்படுத்தவில்லை. நீண்ட வருடங்களாக சத்யா நடித்து 'காதல் டூ கல்யாணம்' படம் எப்போது வரும் என்றே தெரியவில்லை. நாளை சத்யா நாயகனாக நடித்துள்ள 'எட்டுத் திக்கும் மதயானை' படம் வெளிவர உள்ளது.

இந்தப் படமாவது சத்யாவுக்கு வெற்றிப் படமாக அமையுமா என்பதுதான் தற்போதைய கேள்வி. இந்தப் படத்தில் காக்கி சட்டையுடன் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகத்தான் சத்யா நடித்திருக்கிறாராம். இந்தப் படமாவது சத்யாவின் பெயரை 'எட்டுத் திக்கும்' கொண்டு போய்ச் சேர்க்குமா என்று பார்ப்போம்.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம்? - சாம் சிஎஸ் ஓபன் டாக்
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions