நாச்சியாரின் தே- வார்த்தை வசனத்தால் யாருக்கு பாதிப்பு? - நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

Bookmark and Share

நாச்சியாரின் தே- வார்த்தை வசனத்தால் யாருக்கு பாதிப்பு? - நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் நாச்சியார் படத்தின் டீஸர் ஒற்றை வசனத்துடன் வெளியாகி இருந்தது.

அந்த ஒற்றை வசனமும் தே என தொடங்கும் கெட்ட வார்த்தையாக இருந்ததால் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பாலா மற்றும் ஜோதிகா மீது சிலர் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த கரூர் குற்றவியல் நீதிமன்றம் இந்த வார்த்தையால் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டது என கேள்வி எழுப்பி அந்த பட்டியலை வரும் டிசம்பர் 11-ம் தேதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

 இந்த வழக்கை இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த பாண்டியன் தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions