பாலாவுக்காக தள்ளிப்போகும் சண்டிவீரன் ஆடியோ ரிலீஸ்!

Bookmark and Share

பாலாவுக்காக தள்ளிப்போகும் சண்டிவீரன் ஆடியோ ரிலீஸ்!

பரதேசியைத் தொடர்ந்து சசிகுமார்-வரலட்சுமி நடிப்பில் தாரை தப்பட்டை படத்தை இயக்கி வருகிறார் பாலா. கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை ரியலாக பதிவு செய்து கொண்டிருக்கும் அவர் கடந்த சில மாதங்களாகவே தஞ்சாவூரில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்.  

இந்த நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு என்ற படத்தை ஏற்கனவே தயாரித்த பாலா, தற்போது அதர்வா நடிப்பில் சற்குணம் இயக்கியுள்ள, சண்டிவீரன் படத்தையும் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகள் கடந்த மாதமே முடிவடைந்து விட்டது.

கோலிசோடா படத்திற்கு இசையமைத்த அருணகிரி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும், ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் அப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

ஆனால், தாரை தப்பட்டை படத்தின் உணர்வுப்பூர்வமான க்ளைமாக்ஸ் காட்சிகளை தற்போது படமாக்கிக்கொண்டிருக்கும் பாலா, அதை விட்டு விட்டு ஆடியோ விழாவுக்கு தன்னால் வர இயலாது என்று தெரிவித்து விட்டாராம்.

அதன்காரணமாக, சண்டிவீரன் ஆடியோ விழாவை தாரைதப்பட்டை படத்தின் க்ளைமாக்ஸ் வேலைகளை அவர் முடித்த பிறகு நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

 


Post your comment





Related News
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
நான் சின்ன பொண்ணுங்க..... 'மதுரைவீரன்'மீனாட்சி
மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.!
ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை "மதுரவீரன்" பேசும் – சண்முகபாண்டியன்
பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? - உங்க சாய்ஸ் எது?
“மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் – இயக்குநர் P.G. முத்தையா
`மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions