பாலாவின் சண்டி வீரனை வாங்கியது ஸ்ரீ கீரீன்!

Bookmark and Share

பாலாவின் சண்டி வீரனை வாங்கியது ஸ்ரீ கீரீன்!

இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரித்த "சண்டி வீரன்" படத்தின் வெளியீட்டு உரிமையை வெற்றிகரமாக கைபற்றிய ஸ்ரீ கீரீன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் பாலா இயக்கத்தில் பரதேசி, மற்றும் மிஷ்கின் இயக்கிய பிசாசு போன்ற படங்களைத் தயாரித்தது பி ஸ்டுடியோஸ். பாலாவின் சொந்தப் பட நிறுவனம் இது.

தற்போது சற்குணம் இயக்கத்தில், அதர்வா மற்றும் ஆனந்தி நடிக்கும் சண்டி வீரன் என்னும் படத்தைத் தயாரித்துள்ளது. சண்டி வீரன் படத்தை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் வெளியிடும் உரிமையை எம்எஸ் சரவணனின் ஸ்ரீ கீரீன் புரொடக்ஷன்ஸ் பெற்றுள்ளது.

ஸ்ரீ கீரீன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் சலீம், வேலையில்லா பட்டதாரி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற வெற்றிப் படங்களை இதற்கு முன் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சலிம் திரைப்படத்தையும், சிட்டி ஏரியாவில் வேலையில்லா பட்டதாரி மற்றும் கயல் படத்தையும், செங்கல்பட்டு ஏரியாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், பிட்சா 2, வெள்ளைக்கார துரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்களையும் வெளியிட்டுள்ளனர். இப்போது சண்டி வீரனை தமிழகம், கேரளா, கர்நாடகாவில் வெளியிடவிருக்கின்றனர். நய்யாண்டி படத்துக்குப் பிறகு சற்குணம் இயக்கும் படம் இது.


Post your comment





Related News
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
நான் சின்ன பொண்ணுங்க..... 'மதுரைவீரன்'மீனாட்சி
மதுரவீரன் படத்தில் தளபதி விஜய் - வெளிவந்த சர்ப்ரைஸ் தகவல்.!
ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை "மதுரவீரன்" பேசும் – சண்முகபாண்டியன்
பிப்ரவரி-2ல் மட்டும் இத்தனை படங்கள் ரிலீஸா? - உங்க சாய்ஸ் எது?
“மதுரவீரன்” ஜல்லிக்கட்டு பற்றிய படம் மட்டும் அல்லாமல் அதன் பின்பு நிகழும் அரசியலையும் மையப்படுத்தியே இருக்கும் – இயக்குநர் P.G. முத்தையா
`மதுர வீரன்' படத்தின் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்ட விஜயகாந்த்
ஆர்.கே.நகர் அரசியல் களத்தில் ஒலிக்கும் மதுரவீரன் பாடல்
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions