சீனு ராமசாமியை முட்டாள் என்று நினைத்த இயக்குனர் பாலா

Bookmark and Share

சீனு ராமசாமியை முட்டாள் என்று நினைத்த இயக்குனர் பாலா

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘தர்மதுரை’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் பாலா, படத்தின் ஆடியோவை வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது, 

எனக்கு ஜுனியர் சீனுராமசாமி. நான் பாலுமகேந்திரா சாரிடம் இருந்து வெளியே வந்ததும் சீனு ராமசாமி முதல் படம் பண்ணினார். அப்போது பாலு மகேந்திரா சாரின் மனைவி என்னை அழைத்து சீனு ராமசாமி ஒரு படம் இயக்கியிருக்கிறான். அதைப் போய் பார் என்று சொன்னார். அவர், எப்போதும் என்னை எந்த படத்தையும் பார்க்கச் சொல்லமாட்டார். அப்படியிருக்கும்போது, இந்த படத்தை பார்க்கச் சொல்கிறாரே என்று படத்தை பார்க்க போனேன்.

படம் பார்ப்பதற்கு முன்புவரை சீனு ராமசாமியை முட்டாள் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால், படத்தை பார்த்தபிறகுதான் அவன் பெரிய புத்திசாலி என்று தெரிந்தது. சீனு ராமசாமிக்கு சினிமாவை தவிர வேறு ஒன்றுமே தெரியாது. எப்போதும் சினிமாவைப் பற்றியேத்தான் பேசிக் கொண்டேயிருப்பான். 

நாம் சினிமாவில்தானே இருக்கிறோம். பிறகு, ஏன் சினிமாவை பற்றி பேசவேண்டும் என்று கேட்பேன். இருந்தாலும், எப்போதும் சினிமாவை பற்றிய பேச்சைத்தான் பேசிக்கொண்டேயிருப்பான். இதனால்தான், அவன் வருகிறான் என்றால், தலைதெறிக்க ஓடிய சம்பவங்களும் நடந்திருக்கிறது என்று பேசினார்.


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
தமிழை புறக்கணிக்கிறோம் - சீனுராமசாமி வேதனை
டிராபிக் ராமசாமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
தயாரிப்பாளரின் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் உத்தமரா- இயக்குனர் போட்ட திடுக்கிடும் பதிவு
அன்புசெழியனை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது: இயக்குனர் சீனு ராமசாமி
முதன்முறையாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசைமைக்கும் பிரபல இயக்குனரின் படம்
யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள்
மறைந்த துக்ளக் சோவுக்கு பத்மபூஷண் விருது - மத்திய அரசு அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions