விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’ பாடல்களை வெளியிட்ட இயக்குனர் பாலா

Bookmark and Share

விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’ பாடல்களை வெளியிட்ட இயக்குனர் பாலா

விஜய் சேதுபதி - தமன்னா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தர்மதுரை’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவுக்கு இயக்குனர் பாலா, தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, நடிகர்கள் ரமணா, ஜே.கே.ரித்தீஷ், கஞ்சா கருப்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும், நடிகைகள் சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் தங்கர் பச்சான், காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் இயக்குனர் பாலா, ‘தர்மதுரை’ படத்தின் பாடல்களை வெளியிட சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் சேர்ந்து பெற்றுக் கொண்டனர்.

விழாவில் டி.சிவா பேசும்போது, விஜய் சேதுபதி தற்போது தயாரிப்பாளர்களின் நடிகராக மாறியிருக்கிறார். இவர் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர்களும் பெரிய வெற்றி பெறுகிறார்கள். எனவே, விஜய் சேதுபதி கண்டிப்பாக வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்தினார். மேலும், அவர் பேசும்போது, விஜய் சேதுபதி தயாரிப்பாளர்களை முதலாளி என்று அழைப்பது, 25 வருடத்திற்கு முந்தைய நினைவுகளை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.

‘தர்மதுரை’ படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் தமன்னா, சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். 


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions