பாலசந்தர் இல்லையேல், கமல் என்ற ஒருவன் கிடையாது!

Bookmark and Share

பாலசந்தர் இல்லையேல், கமல் என்ற ஒருவன் கிடையாது!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம்-2 என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் முதலாவதாக உத்தமவில்லன் படம் அடுத்தமாதம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.

தற்போது இப்படத்தின் ரிலீஸ்க்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கமல்ஹாசன். இந்நிலையில் ஐதராபாத் சென்றிருந்த கமல், செய்தியாளர்களின் சரமாரியான கேள்விக்கு தனது ஸ்டைலில் பதிலளித்தார்.

அவர் பேசியதிலிருந்து... என் படம் தாமதாமாவதாக சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. விஸ்வரூபம் படத்தை 6 மாதத்தில் இயக்கி முடித்தேன். ஆனால் சில பிரச்னைகளால் தாமதமானது.

தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் மூன்று மாதத்தில் முடித்தேன். தயாரிப்பு தரப்பில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது என்றவர், பாலசந்தரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, பாலசந்தர் இல்லையேல் இன்று கமல் இல்லை. அவர் தான் என்னை நடிகராக்கினார்.

என் வாழ்க்கையை மாற்றியவர் அவர் தான். அவர் இல்லாவிட்டால் இன்று நான் ஒரு டான்ஸ் மாஸ்டராகவோ அல்லது உதவி இயக்குநராக இருந்திருப்பேன் என்றார். ஹாலிவுட் படங்கள் பற்றி பேசும்போது, நாம், ஹாலிவுட் படங்களை திருடுவதாக சொல்கிறார்கள்.

ஆனால் ஹாலிவுட்காரர்களும் நமது கதையை காப்பியடித்து படம் எடுக்கிறார்கள். தெலுங்கில் நான் நடித்த சுவாதி முத்யம் படத்தின் கதையை தழுவி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு ஹாலிவுட்டில் பாரஸ்ட் ஹம்ப் என்ற படம் வந்தது என்று கூறினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions