ரசிகர்களை ஈர்க்க குறும்பாக டைட்டில் வைத்த கேரள பாக்யராஜ்..!

Bookmark and Share

ரசிகர்களை ஈர்க்க குறும்பாக டைட்டில் வைத்த கேரள பாக்யராஜ்..!

கேரள சினிமாவின் பாக்யராஜ் என்று பாராட்டு வாங்கும் அளவுக்கு குடும்பத்தை மையமாக வைத்து படங்களை இயக்கும் இயக்குனர்  என பெயர் பெற்றவர்தான் இயக்குனர் பாலச்சந்திர மேனன்..

1978ல் இயக்குனராகவும் நடிகராகவும் ஆரம்பித்த இவரது திரையுலக பயணம் 1996 வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் போனது.. ஆனால் அதன் பின்னர் ஏற்பட்ட சினிமா சுழற்சியில் இவரது குடும்ப சினிமா பிசினஸ் சரியாக வேகவில்லை..

கடந்த நான்கு வருடங்களில் மொத்தமே நான்கு படங்களை மட்டும் இவர் இயக்கியுள்ளார். அதில் கடைசியாக இவர் படம் இயக்கியது 2008ல் தான். படத்தின் பெயர் 'டா இங்கோட்டு நோக்கியே'.. அதாவது 'டே இந்தப்பக்கம் பாருடா' என்பதுதான் அர்த்தம்..

ஆனால் படத்தையும் சரி.. இவரையும் சரி.. ரசிகர்கள் திரும்பிக்கூட பார்க்கவில்லை.. கொஞ்ச நாட்கள் குணச்சித்திர நடிகராக காலத்தை தள்ளியவர், இப்போது மீண்டும் டைரக்சன் துறையில் இறங்கியுள்ளார்..

ஆனால் படத்திற்கு இந்த முறையும் மற்றவர்களின் கவனத்தை திருப்பும் விதமாக 'நான் சம்விதானம் செய்யும்' அதாவது 'நான் படம் இயக்குவேன்' என்கிற பெயரை தலைப்பாக வைத்து அசத்தியுள்ளார். எப்படியோ ரசிகர்கள் அசந்தால் சரி தான்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions