வாட்ஸ்–அப்’பில் பரவும் காமெடி நடிகர் பாலாஜியின் தற்கொலை செய்தி

Bookmark and Share

வாட்ஸ்–அப்’பில் பரவும் காமெடி நடிகர் பாலாஜியின் தற்கொலை செய்தி

தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டி.வி. நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். 

சென்னை சூளைமேடு எம்.எம்.டி.ஏ. காலனியில் மனைவி நித்யா, மகள் போஷிகா ஆகியோருடன் வசித்து வரும் இவர் தொடர்ந்து டி.வி. நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார். நேற்று மாலையில் வீடு திரும்பிய இவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் அவரது உடல் நிலையை பரிசோதித்தனர். அப்போது பாலாஜிக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி இருப்பதும், அதன் காரணமாகவே மயக்கம் ஏற்பட்டதும் தெரிய வந்தது.

இதற்கிடையே பாலாஜி தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றதாகவும், இதன் காரணமாகவே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ‘வாட்ஸ்–அப்’பில் தகவல்கள் வெளியானது.

இதுபற்றி பாலாஜியிடம் கேட்டபோது, ”கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் எனது உடல்நிலை பற்றி இதுபோன்று தவறான தகவல் பரப்பப்பட்டது. இப்போது 2–வது முறையாக அதே போன்று வதந்தியை பரப்பி விட்டுள்ளனர்.

பணிச்சுமை காரணமாகவே எனக்கு மயக்கம் ஏற்பட்டது. நான் நலமுடன் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம்”. இவ்வாறு பாலாஜி கூறினார்.


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..அதை செய்யாதீங்க! பிக்பாஸ் மிட்நைட் மசாலா
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
மஹத்திற்கு பிக்பாஸ் கொடுத்த சாப்பாடு! கண்கலங்கிய போட்டியாளர்..
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions