நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு குவிந்த 1500 குறும் படங்கள்

Bookmark and Share

நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு குவிந்த 1500 குறும் படங்கள்

பீட்சா, ஜிகிர்தண்டா படங்களை இயக்கிய கார்திக் சுப்புராஜ், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் படங்களை இயக்கிய பாலாஜி மோகன், பாலாஜி தரணிதரன் உள்பட பல இயக்குனர்களையும், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கருணாகரன், சதீஷ், செண்ட்ராயன், காளி போன்ற நடிகர்களையும் தந்த நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியின் 6வது சீசன் தொடங்க உள்ளது.

இதன் 6வது சீசனில் பங்கேற்பதற்காக இதுவரை 1500 படங்கள் வந்த குவிந்துள்ளது. அதிலிருந்து 150 படங்களை தேர்வு குழு இறுதி பட்டியலிட்டுள்ளது. பிரபல சினிமா இயக்குனர்களை கொண்ட நடுவர் குழு அதிலிருந்து 36 படங்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறது.

இந்த படங்களே நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும். இதன் இயக்குனர்களே நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவார்கள்.சீசன் 6 நிகழ்ச்சிகள் 52 முதல் 56 வாரங்கள் வரை ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.

இதில் பல ரவுண்டுகள் நடத்தப்பட்டு கடைசி ரவுண்டுக்கு நான்கு படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி சுற்று நடக்கும். அதனை பிரமாண்ட நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்டிருக்கிறர் தயாரிப்பாளர் ஜே.வி.மீடியா ஜே.வடிவேல்.

கடந்த சீசன் இறுதி சுற்றில் கே.பாலச்சந்தர், வெற்றி மாறன், சுசீந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள் இந்த சீசனுக்கு இயக்குனராகவும் நடிகராகவும் உள்ள செலிபிரிட்டிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions