கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகர் பாலகிருஷ்ணா!

Bookmark and Share

கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகர் பாலகிருஷ்ணா!

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. அதுமட்டுமின்றி அரசியலில் களமிறங்கி எம்.எல்.ஏ.,வாகவும் இருந்து வருகிறார்.

இவர் நேற்று தனது சட்டமன்ற தொகுதியான ஹிந்துபூரில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஐதராபாத் செல்வதற்காக பெங்களூர் விமான நிலையம் சென்று கொண்டிருக்கும் வேளையில் அவரது கார் பாகபல்லி என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பாலகிருஷ்ணா உயிர் தப்பினார். அதுமட்டுமின்றி காரை பாலகிருஷ்ணாதான் ஓட்டிச் சென்றதாகவும், காரின் முன்பக்க டயர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் காரில் பாலகிருஷ்ணாவுடன் பயணித்தவர்களும் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர், வேறொரு கார் வரவழைக்கப்பட்டு பாலகிருஷ்ணா பத்திரமாக பெங்களூர் சென்று, விமானம் மூலம் ஐதராபாத் திரும்பினார்.

 


Post your comment





Related News
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!
பெண்களை தவறாக பேசியதாக புகார்: மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா
யுரோப் செல்லுகிறது டிக்டேட்டர் படக்குழுவினர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions