பிரபல தெலுங்கு நடிகர் பாலாகிருஷ்ணா சினிமாவை விட்டு விலக முடிவு

Bookmark and Share

பிரபல தெலுங்கு நடிகர் பாலாகிருஷ்ணா சினிமாவை விட்டு விலக முடிவு

தெலுங்கு உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் மறைந்த முன்னாள் நடிகரும், ஆந்திராவின் முதலமைச்சராகவும் இருந்த என்.டி.ராமாராவின் மகனாவார். இவர், நடித்த பல படங்கள் தெலுங்கு திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டியது. சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே பாலகிருஷ்ணா தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த 40 வருடங்களாக சினிமாவில் கோலாச்சி வரும் பாலகிருஷ்ணா, தற்போது சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். தனது 100-வது படத்தை முடித்த கையோடு சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் களமிறங்க பாலகிருஷ்ணா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலகிருஷ்ணா தற்போது தனது 99-வது படமாக ‘டிக்டேட்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதியில் முடிவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து, போயாபதி சீனு இயக்கும் தனது 100-வது படத்தில் அடுத்த வருடம் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை முடித்த பிறகு, 2017-ஆம் ஆண்டு முதல் பாலகிருஷ்ணா தீவிர அரசியலில் களமிறங்கப் போவதாக கூறப்படுகிறது. அதன் முதற்கட்டமாக ஹிந்துபூர் தொகுதியின் வளர்ச்சி பணிகளில் தீவிரம் காட்டப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. 


Post your comment





Related News
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகர் பாலகிருஷ்ணா!
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!
பெண்களை தவறாக பேசியதாக புகார்: மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions