நடிகர் பாலகிருஷ்ணாவின் 99வது படம் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு

Bookmark and Share

நடிகர் பாலகிருஷ்ணாவின் 99வது படம் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு

தெலுங்கு திரையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி வந்த லயன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தெலுங்கு திரையின் முன்னணி நடிகையான த்ரிஷா மற்றும் ஹிந்தி நடிகை  ராதிகா ஆப்தே ஆகியோர் லயன் படத்தில்   நாயகிகளாக நடித்து வருகின்றனர்.  இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருக்கின்றது.

அதோடு இப்படம் கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக மே 1ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கின்றது.  இந்நிலையில் நடிகர்  பாலகிருஷ்ணாவின் 99வது படத்தை பற்றிய தகவல் வந்துள்ளது.

டிக்டேட்டர் என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் ஸ்ரீநிவாஸ் இயக்க உள்ளதாக தெரிகின்றது. இதனை  இயக்குநர் ஸ்ரீநிவாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.  ஈராஸ் இன்டர்நேஷ்னல் தயாரிக்க இருக்கின்றது.

இப்படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தெலுங்கு திரையில் வெற்றி ஜோடிகளாக வலம் வரும் நடிகர் பாலகிருஷ்ணா  மற்றும் நடிகை நயன்தாரா ஜோடி மூன்றாவது முறையாக இணையவுள்ளது. வரும் மே மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் இருந்து உயிர் தப்பிய நடிகர் பாலகிருஷ்ணா!
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலகிருஷ்ணாவின் 100-வது படத்தில் நடிக்கும் காஜல்!
பெண்களை தவறாக பேசியதாக புகார்: மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions