பாலைய்யாவின் 100வது படத்தயாரிப்பாளர் யார்...?

Bookmark and Share

பாலைய்யாவின் 100வது படத்தயாரிப்பாளர் யார்...?

பாலைய்யாவின் 100வது படத்தை தயாரிக்கப்போவது யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அந்த படத்தை தயாரிக்க போட்டி போட்டன.

ஆனால் அந்த படத்தை பாலைய்யா தனது குடும்பத்தயாரிப்பாக கொடுக்க முடிவு செய்து விட்டார். அவரின் அண்ணன் மகனும், பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான நந்தமூரி கல்யாண் ராம் தான் அந்த படத்தின் தயாரிப்பாளராம்.

இந்த படத்தை நந்தமூரி கல்யாண் ராம் தனது, என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார். பாலைய்யாவின் 100வது படம் அவருடைய வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகும்.

அந்த படத்திற்கு சரித்திரகொக்கடு என பெயர் வைத்து இருப்பதாக தெரிகிறது. அந்த படத்தை தனது தந்தையும், தலைசிறந்த நடிகரும், மறைந்த முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவுக்கு காணிக்கையாக்க வேண்டும் என்பதால் தான் தனது அண்ணன் மகனை தயாரிக்க சொல்லியதாக தெரிகிறது.

தற்போது பாலைய்யா லயன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. அந்த படத்தை அறிமுக இயக்குனரான சத்யதேவ் இயக்குகிறார். பிரபல நடிகையான திரிஷா மற்றும் ராதிகா ஆப்டே ஆகியோர் பாலைய்யாவுக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

 


Post your comment





Related News
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலைய்யா - யுவராஜ் சிங் சந்திப்பு
லயன் படம் தாமத்திற்கான காரணம்!
அமெரிக்க தெலுங்கு மாநாட்டில் பங்கேற்கும் பாலகிருஷ்ணா!
சிக்கலில் லயன் பட விற்பனை
உழைப்பாளர் தினத்தில் திரைக்கு வரும் லயன்!
ரம்மி டைரக்டர் பாலகிருஷ்ணனின் அடுத்த படம்!
பாலைய்யாவின் ஹீரோயின் யார்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions