அமெரிக்க தெலுங்கு மாநாட்டில் பங்கேற்கும் பாலகிருஷ்ணா!

Bookmark and Share

அமெரிக்க தெலுங்கு மாநாட்டில் பங்கேற்கும் பாலகிருஷ்ணா!

வட அமெரிக்க வாழ் தெலுங்கு சங்கத்தினரின் மாநாட்டில் கலந்து கொள்ள யுவரத்னா நந்தமூரி பாலகிருஷ்ணா, லாஸ் ஏஞ்செல்சுக்கு செல்ல இருக்கிறார். அந்த சங்கத்தினர் ஆண்டுக்கு இரு முறை நடத்தும் இந்த மாநாடு சிறப்பு வாய்ந்ததாகும்.

இதில் பல துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்வது வழக்கம். வரும் ஜூலை மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெறும் இந்த முக்கிய மாநாட்டில் நந்தமூரி பாலகிருஷ்ணா மூன்று நாளும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்.

அமெரிக்காவில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் பெரும் அளவில் உள்ளனர். அவர் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து அவருடைய ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.

மேலும் அவர்கள் தங்களுடைய நந்தமூரி ஸ்டாரை வரவேற்க பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கட்சியின் எம்.எல்.ஏ என்ற வகையில் நந்தமூரி பாலகிருஷ்ணா அமெரிக்க செல்வது முதன் முறையாகும்.

அந்த மாநாட்டில் நந்தமூரி பாலகிருஷ்ணா கலந்து கொள்வது தங்களுக்கு பாக்கியம் என்று அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது அழைப்பை ஏற்றதற்கு நந்தமூரி பாலகிருஷ்ணாவிற்கு மிக்க நன்றி என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

 


Post your comment





Related News
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!
பாலைய்யா - யுவராஜ் சிங் சந்திப்பு
லயன் படம் தாமத்திற்கான காரணம்!
சிக்கலில் லயன் பட விற்பனை
பாலைய்யாவின் 100வது படத்தயாரிப்பாளர் யார்...?
உழைப்பாளர் தினத்தில் திரைக்கு வரும் லயன்!
ரம்மி டைரக்டர் பாலகிருஷ்ணனின் அடுத்த படம்!
பாலைய்யாவின் ஹீரோயின் யார்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions