கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!

Bookmark and Share

கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும், சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. அதேநேரத்தில் அரசியலில் களமிறங்கி எம்.எல்.ஏ.,வாகவும் இருந்து வருகிறார்.

இவர் நேற்று தனது சட்டமன்ற தொகுதியான ஹிந்துபூரில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஐதராபாத் செல்வதற்காக பெங்களூர் விமான நிலையம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரது கார் பாகபல்லி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவில் அமைக்கப்பட்ட தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பாலகிருஷ்ணா உயிர் தப்பினார். விபத்து நடக்கும்போது காரை பாலகிருஷ்ணாதான் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், காரின் முன்பக்க டயர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காரில் பாலகிருஷ்ணாவுடன் பயணித்தவர்களும் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். பின்னர், வேறொரு கார் வரவழைக்கப்பட்டு பாலகிருஷ்ணா பத்திரமாக பெங்களூர் சென்று, விமானம் மூலம் ஐதராபாத் திரும்பினார்.


Post your comment





Related News
நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்
டிடிக்கு போலி அக்கவுண்ட்... பாவனா அக்கவுண்ட் ஹேக்... டிவி ஆங்கர்களுக்கும் சோதனை
பாலைய்யா - யுவராஜ் சிங் சந்திப்பு
லயன் படம் தாமத்திற்கான காரணம்!
அமெரிக்க தெலுங்கு மாநாட்டில் பங்கேற்கும் பாலகிருஷ்ணா!
சிக்கலில் லயன் பட விற்பனை
பாலைய்யாவின் 100வது படத்தயாரிப்பாளர் யார்...?
உழைப்பாளர் தினத்தில் திரைக்கு வரும் லயன்!
ரம்மி டைரக்டர் பாலகிருஷ்ணனின் அடுத்த படம்!
பாலைய்யாவின் ஹீரோயின் யார்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions