பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!

Bookmark and Share

பலூன் படம் பற்றி பேசிய ஜெய்.!

சுய விளம்பரங்கள் அவசியம் என கருதப்படும் சினிமாத்துறையில் ஒரு சில நடிகர்களே தாங்கள் பேசுவதை விட தங்கள் படங்கள் பேசுவதையே விரும்புவார்கள். அப்படியான ஒரு நடிகர் தான் ஜெய்.

அவரது அடுத்த படமான 'பலூன்' படம் வரும் டிசம்பர் 29 ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. இப்படத்தை சினீஷ் இயக்க, '70mm Entertainment' நிறுவனம் தயாரித்துள்ளது.

'பலூன்' படத்தை ''Auraa Cinemas' தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யவுள்ளது. இப்படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் ஜெய்க்கு அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர்.

'பலூன்' படம் குறித்து ஜெய் பேசுகையில் , '''பலூன்' தான் எனது முதல் திகில் படம். இதற்கு முன்பு நிறைய திகில் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவை சுவாரஸ்யமானதாக இல்லாததால் மறுத்துவிட்டேன். இந்த 'பலூன்' பட கதையை இயக்குனர் சினிஷ் என்னிடம் சொன்னபொழுது அது என்னை மிகவும் ஈர்த்தது.

ஒரு கதாபாத்திரத்தில் அசிஸ்டன்ட் இயக்குனராகவும் , பிளாஷ்பேக் பகுதியில் பலூன் விற்கும் நபராகவும் நடித்துள்ளேன். இப்படத்தில் எனது கிளவுன் வேடம் நிச்சயம் ரசிக்கப்படும் என நம்புகிறேன். இந்த படத்தை யுவனின் இசை அடுத்த தளத்திற்கு கொண்டுபோயுள்ளது என்பதே உண்மை.

இது ஒரு திகில் படமாக மட்டும் இல்லாமல் , காதல் , காமெடி என அணைத்து அம்சங்களும் அழகான கலவையில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படம் எனது சினிமா வாழ்வில் ஒரு முக்கியமான படமாக நிச்சயம் இருக்கும். டிசம்பர் 29 ஆம் தேதியை எதிர்நோக்கியுள்ளேன் ''.

 


Post your comment





Related News
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
நடிகை அனுஜாவுக்கு குழந்தை பிறந்தது
ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்
கலையரசன் – ஜனனி ஐயர் நடிக்கும் ‘அதே கண்கள்’!
முதன்முதலாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்த ஜனனி ஐயர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions