நடிகர் பாலுஆனந்த் மாரடைப்பால் மரணம்

Bookmark and Share

நடிகர் பாலுஆனந்த் மாரடைப்பால் மரணம்

கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் இயக்குனரும் நடிகருமான பாலு ஆனந்த் (வயது 62).

இவரது மனைவி உமாமகேஷ்வரி. இவர்களுக்கு ஸ்ரீசரவணன் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர் கடந்த சில வருடங்களாக பாலு ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் திடீரென சேரில் அமர்ந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு பாலு ஆனந்த் இறந்து விட்டார்.

மரணம் அடைந்த பாலு ஆனந்த் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். அதன் பின்னர் நானே ராஜா, நானே மந்திரி, ரசிகன் ஒரு ரசிகை, அண்ணாநகர் முதல் தெரு, உனக்காக பிறந்தேன். சிந்து பாத் உள்பட 12 படங்களை இயக்கினார். 

மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மரணம் அடைந்த பாலு ஆனந்த் உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவரது உடல் இன்று மாலை 3 மணியளவில் வீரகேரளத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

 


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions