பெங்களூர் டேஸ் ரீமேக் படத்தின் தலைப்புக்கு புது சிக்கல்?

Bookmark and Share

பெங்களூர் டேஸ் ரீமேக் படத்தின் தலைப்புக்கு புது சிக்கல்?

மலையாளத்தில் வெற்றி பெற்ற பல படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்று வருகிறது. அந்த வரிசையில் ஜோதிகா நடித்து வெளிவந்த ‘36 வயதினிலே’, கமல் நடித்து வெளிவந்த ‘பாபநாசம்’ ஆகிய படங்கள் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்டு பெரிய வெற்றி பெற்றுள்ளன. 

அந்த வரிசையில் மலையாளத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘பெங்களூர் டேஸ்’ தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழ் ரீமேக்கில், ஆர்யா, ராணா டகுபதி, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, ராய் லட்சுமி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பாஸ்கர் என்பவர் இயக்கி வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு ‘அர்ஜுன் திவ்யா மற்றும் கார்த்திக்’ என்ற பெயரை சுருக்கி ADMK என்று தலைப்பு தேர்வு செய்தனர். 

இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை பெயர்களை குறிப்பிடும் வகையில் இப்படத்தின் தலைப்பு இருந்தாலும், இது ஒரு அரசியல் கட்சியின் பெயரை குறிப்பிடுவதாக அமைந்துள்ளதால், படத்தின் தலைப்புக்காக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியிடம் அனுமதி கேட்டுள்ளார்களாம். அவர்களிடமிருந்து உரிய பதில் வந்தால் இந்த தலைப்பையே பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். 

ஆனால், படக்குழுவினரோ, இந்த தலைப்பு இயக்குனர் பாஸ்கருக்கு பிடிக்கவில்லையென்றும், எனவே, படத்தின் தலைப்பு மாற்றப்படும் என்றும் கூறுகின்றனர். எதுவானாலும், கூடிய விரைவில் புதிய தலைப்புடன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் 3 நாள் வசூல் நிலவரம் இதோ.!
பெங்களுர் நாட்கள் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!
நாளை முதல் திரையை கலக்கவரும் பெங்களுர் நாட்கள்!
‘பெங்களூர் நாட்கள்’ டிரைலர் இன்று வெளியாகிறது!
பெங்களூர் நாட்கள் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த மலையாள ரீமேக்?
பெங்களூரில் வீடு கட்டும் பெங்களூர் டேய்ஸ் ஜோடி..!
மே 22 ஆம் தேதி திரைக்கு வரும் 365 டேஸ்
சிரஞ்சிவின் 150வது படத்திற்கு கதை சிக்கியது
பெங்களூர் டேய்ஸ் கொண்டாட்டத்தில் துல்கர், நிவின் பாலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions