தனித் தனியாகப் பிரிந்த 'பெங்களூர் டேய்ஸ்'

Bookmark and Share

தனித் தனியாகப் பிரிந்த 'பெங்களூர் டேய்ஸ்'

மலையாளத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, ஃபகத் பாசில், நஸ்ரியா, இஷா தல்வார், பார்வதி மேனன், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'பெங்களூர் டேய்ஸ்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் தயாரிக்கும் உரிமையை பிவிபி சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. இப்படத்தை தமிழ், தெலுங்கில் ஒரே நடிகர்கள் நடிக்கத் தயாரிப்பதாக முடிவு செய்திருந்தனர்.

ஆனால், இரு மொழிகளிலும் நடிக்க பொருத்தமான நடிகர்கள் கிடைக்காததால் அந்த முடிவு தற்போது கைவிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், தமிழில் வேறு நட்சத்திரங்கள், வேறு இயக்குனருடனும், தெலுங்கில் வேறு நட்சத்திரங்கள் வேறு இயக்குனருடனும் தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம்.

தமிழில் ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா டகுபதி, ஸ்ரீதிவ்யா, பார்வதி மற்றும் பலர் நடிக்க தெலுங்கில் 'பொம்மரிலு' படத்தை இயக்கிய பாஸ்கர் இயக்க உள்ளார். தெலுங்கில் சர்வானந்த், வருண் தேஜ், ஸ்ரீனிவாஸ் அவசராலா, நித்யா மேனன் ஆகியோர் நடிக்க வேணு ஸ்ரீராம் இயக்க உள்ளார்.  தமிழ் பதிப்பின் ஆரம்பம் மற்றும் பூஜை நாளை சென்னையில் நடைபெற உள்ளது.


Post your comment





Related News
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
சென்னையில் ருத்ரதாண்டவம் ஆடும் மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் 3 நாள் வசூல் நிலவரம் இதோ.!
பெங்களுர் நாட்கள் படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி!
நாளை முதல் திரையை கலக்கவரும் பெங்களுர் நாட்கள்!
‘பெங்களூர் நாட்கள்’ டிரைலர் இன்று வெளியாகிறது!
பெங்களூர் நாட்கள் படத்தை தொடர்ந்து தற்போது அடுத்த மலையாள ரீமேக்?
பெங்களூர் டேஸ் ரீமேக் படத்தின் தலைப்புக்கு புது சிக்கல்?
பெங்களூரில் வீடு கட்டும் பெங்களூர் டேய்ஸ் ஜோடி..!
மே 22 ஆம் தேதி திரைக்கு வரும் 365 டேஸ்
சிரஞ்சிவின் 150வது படத்திற்கு கதை சிக்கியது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions