'பெங்களூர் டேய்ஸ்' தமிழ் ரீமேக் படத்தின் பூஜை

Bookmark and Share

'பெங்களூர் டேய்ஸ்' தமிழ் ரீமேக் படத்தின் பூஜை

இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் படம் என்றாலே இந்தக் காலத்தில் பெரும் பிரச்னை ஏற்படும். அப்படியிருக்க ஒரு படத்தில் மூன்று ஹீரோக்கள், மூன்று ஹீரோயின்களைத் தேர்வு செய்து ஒரு படத்தில் நடிக்க வைப்பது என்றால் சாதாரண விஷயமில்லை.

மலையாளத்தில் நட்சத்திரங்களுக்குள் எந்த பாகுபாடும், எந்த ஈகோவும் இல்லாமல் இருக்கும். ஆனால், தமிழில் அப்படி இல்லை என்று சிலர் காட்டிக் கொண்டாலும் திரையில் ஒன்று சேர மாட்டார்கள்.

மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'பெங்களூர் டேய்ஸ்' படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்து எடுக்க உள்ளார்கள். தமிழ் பதிப்பிற்கான பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

படத்தில் நடிக்கும் ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா டகுபதி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள். படத்தின் இயக்குனரான பொம்மரிலு பாஸ்கர், இயக்குனர் ராஜாவின் நெருங்கிய நண்பர் என்பதால் ஜெயம் ரவி, ஜெயம் ராஜா, அவர்களின் அப்பா தயாரிப்பாளர் மோகன் ஆகியோரும் வந்து வாழ்த்தினார்கள்.

'பெங்களூர் டேய்ஸ்'  படத்தில் மலையாள நடிகர்கள் நடித்த கதாபாத்திரங்களில் தமிழில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

துல்கர்  சல்மான் கதாபாத்திரத்தில் ஆர்யாவும், ஃபகத் பாசில் கதாபாத்திரத்தில் ராணா டகுபதியும், நிவின் பாலி கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹாவும், நஸ்ரியா கதாபாத்திரத்தில் ஸ்ரீதிவ்யாவும், பார்வதி கதாபாத்திரத்தில் பார்வதியும், இஷா தல்வார் கதாபாத்திரத்தில் ராய் லட்சுமியும் நடிக்க உள்ளார்களாம்.


Post your comment





Related News
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
நாளை முதல் திரையை கலக்கவரும் பெங்களுர் நாட்கள்!
பெங்களூரில் வீடு கட்டும் பெங்களூர் டேய்ஸ் ஜோடி..!
பெங்களூர் டேய்ஸ் கொண்டாட்டத்தில் துல்கர், நிவின் பாலி..!
தனித் தனியாகப் பிரிந்த \'பெங்களூர் டேய்ஸ்\'
பெங்களூர் டேஸ் ரீ-மேக் : நடிகர் நடிகைகள் தேடுதல் வேட்டை தீவிரம்!
பெங்களூர் டேஸ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்
பெங்களூரை கண்டுகொள்ளாத நடிகர், நடிகைகள்
பெங்களூர் திரைப்பட விழாவில் தமிழ் படங்கள்
தமிழ் படம் இல்லாத விழாவை கமல் துவங்கி வைக்கலாமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions