பங்கிஸ்தான் படத்திற்கு பாகிஸ்தானில் தடை

Bookmark and Share

பங்கிஸ்தான் படத்திற்கு பாகிஸ்தானில் தடை

ரித்தேஷ் தேஷ்முக் - புல்கிட் சாம்ராட் நடித்துள்ள "பங்கிஸ்தான்" படத்திற்கு, பாகிஸ்தான் நாட்டில் தடை விதித்துள்ளது. இதுகுறித்து, படத்தின் இணை தயாரிப்பாளரான ரித்தேஷ் சித்வானி கூறியதாவது, பாகிஸ்தானின் இந்த முடிவு எனக்கு ஆச்சர்யமளிக்கிறது.

ஏனெனில், படத்தின் டிரைலர் மட்டுமே தற்போது ரிலீசாகியுள்ளது. இந்த படம் பாகிஸ்தானிற்கு எதிரான படமோ அல்லது இஸ்லாமிய மதத்திற்கு எதிரான படமோ அல்ல.

பாகிஸ்தான் சென்சார் போர்டிற்கு நேரில் சென்று, தங்களது முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்போவதாக அவர் கூறினார். பங்கிஸ்தான் படம், ஆகஸ்ட் மாதம் 7ம் தேதிக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions