SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!

Bookmark and Share

SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!

சினிமா என்பது ஒலி மற்றும் ஒளியின் கலை. உண்மையில் ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் சவுண்ட் எவ்வாறு விஷுவல் அனுபவத்தை மேம்படுத்துகிறது என்ற நுணுக்கங்களை புரிந்து வைத்துள்ளதால், எப்படியாவது தங்கள் படங்களில் சிறந்த ஒலி வடிவமைப்பாளர்களை கொண்டு வர கடுமையாக போராடுகிறார்கள்.

இந்த நுணுக்கத்தை கொஞ்சம் கற்று, எஸ்பி சினிமாஸ் தயாரிப்பில் பரத் நீலகண்டன் இயக்க, அருள்நிதி நடிக்கும் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2 படத்தில் , திறமையான மற்றும் நன்கு புகழ்பெற்ற ஒலி வடிவமைப்பாளர் உதயகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

உதயகுமார், அனைத்து மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்த புகழ்பெற்ற ஒலி வடிவமைப்பாளர் மற்றும் ஆடியோகிராஃபர் என்பது குறிப்பிடத்தக்கது. 'பேராண்மை'  படத்திற்காக தமிழக அரசு விருதையும் பெற்றிருக்கிறார். 

"ஒலி வடிவமைப்பு துறையில் தனக்கென ஒரு பெயரைக் கொண்டுள்ள உதயகுமார் அவர்களுடன் இந்த படத்துக்காக இணைவது எங்களுக்கு  பெருமையையும், பெருமகிழ்ச்சியையும் அளிக்கிறது.  இயக்குனர் பரத் நீலகண்டன் நல்ல திறமையாளர்.

சிறந்த திறமையாளர்களை இந்த படத்துக்குள் கொண்டு வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. திறமையான கலைஞர்களின் கலவை,  இன்றைய வர்த்தக சூழலில், ஒரு சிறந்த சினிமா அனுபவத்தையும்,படத்தை பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டும் விதமாகவும் இருக்கும்  என  நான் உறுதியாக நம்புகிறேன் "என்று பெருமையோடு கூறுகிறார் தயாரிப்பாளர் சங்கர்.


Post your comment





Related News
அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் படப்பிடிப்புடன் துவங்கியது எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
சட்ட சிக்கலில் சிக்கிய பாரதிராஜாவின் மகன்- அடுத்தது என்ன நடக்கும்
பழம்பெரும் நடிகர் நீலகண்டன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்
ரூ.1000 கோடி மதிப்புள்ள ‘ஜாஸ் சினிமா’ தியேட்டர்களை வாங்கியது எப்படி? விவேக்கிடம் விசாரணை
வருமான வரித்துறை சோதனையால் 3-வது நாளாக முடங்கிய ஜாஸ் சினிமாஸ்
அஜித் படத்தை வாங்கிய சர்ச்சை நிறுவனம் – அரசியல் பஞ்சாயத்து தொடங்குமா?
டிமாண்டி காலனி படப்பிடிப்பு தொடங்கியது
பாரதிராஜா படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராஜா!
பாரதிராஜாவுக்கு வந்தது \'கதாநாயகன்\' விபரீத ஆசை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions