உயர் ரக தொழில் நுட்பங்களுடன் உருவாகும் பெங்கால் டைகர்

Bookmark and Share

உயர் ரக தொழில் நுட்பங்களுடன் உருவாகும் பெங்கால் டைகர்

தெலுங்கு திரை உலகின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள கிக் 2 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து  ரவி தேஜா தற்போது தனது அடுத்த படமான பெங்கால் டைகர் படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாகியுள்ளார்.

ராதா மோகன்  தனது ஸ்ரீசத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வரும் இப்படத்தை இயக்குநர் சம்பத் இயக்கி வருகின்றார். இப்படத்தில் தமன்னா மற்றும் ரிஷி கண்ணா ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் பீம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இப்படத்தில் போலீசாக நடிக்கும் ரவி தேஜா அதிரடி சண்டைக் காட்சிகளில் பங்கேற்று அசத்தி வருகின்றாராம்.

இந்த சண்டைக் காட்சிகளை மேலும் மெருகேற்றும் வண்ணம் பிரத்யேக கேமிராக்களை பயன்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஸ்லோ மோஷன் காட்சிகளை ஸ்டைலாக படம்பிடிக்க உதவும் பேண்டோம் கேமிராக்களை பெங்கால் டைகர் படப்பிடிப்பிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் ரவி தேஜாவின் அதிரடி சண்டைக் காட்சிகள் மேலும் அழகு பெறும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.


Post your comment





Related News
9-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி மாதம் நடக்கிறது
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
தமிழில் ரீமேக் ஆகும் ரவிதேஜா படம்!
ஹிந்தியில் கிக் 2 படத்தை ரீமேக் செய்ய விரும்பாத சல்மான் கான்
ரேஷ்மியை பின்தள்ளிய தேஜஸ்வி!
ரூ.13 கோடிக்கு விலைபோன புரூஸ் லீ?
ஐந்து நாயகிகளுடன் நடிக்கும் சாய் தரன் தேஜ்
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பெங்கால் டைகர்
காந்தி ஜெயந்திக்கு திரைக்கு வரும் கஞ்சி
ராம் சரணின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions