தணிக்கையில் 'யு/ஏ': ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது 'பாகமதி'

Bookmark and Share

தணிக்கையில் 'யு/ஏ': ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது 'பாகமதி'

தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, ஜனவரி 26-ம் தேதி 'பாகமதி' வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.

'பாகுபலி' படத்துக்குப் பிறகு அனுஷ்கா 'பாகமதி' என்னும் படத்தில் நடித்து வந்தார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனுஷ்காவின் பிறந்தநாளை (நவ.7) ஒட்டி, வெளியிட்டது படக்குழு. 'பாகமதி' படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் த்ரில்லர் படமாகும்.

இதன் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து ஜனவரி 26-ம் தேதி வெளியீடு என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

அனுஷ்காவுடன் ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக மதி ஆகியோர் பணிபுரிந்து இருக்கிறார்கள். இப்படத்தை தெலுங்கு இயக்குநர் அசோக் இயக்கியுள்ளார். தெலுங்கில் யூவி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கிறது. தமிழில் ஸ்டூடியோ க்ரீன் வெளியிடுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions