பாகுபலி படத்தின் விற்பனை துவக்கம்

Bookmark and Share

பாகுபலி படத்தின் விற்பனை துவக்கம்

100 கோடி ரூபாய் செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும் சரித்திர திரைப்படமான பாகுபலி அதன் இறுதி கட்டத்தை தற்போது எட்டியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றன. இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் தமிழ்,தெலுங்கு,இந்தி  என மூன்று மொழிகளிலும் பொதுவாக அறியப்பட்ட  பிரபாஸ், ராணா மற்றும் அனுஷ்கா, தமன்னா, நாசர் போன்ற பிரபலங்கள்  நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு, கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கின்றார்.

ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் இப்படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வருவதால் இப்படத்தின் திரையிடும் விநியோகம் துவங்கியுள்ளது.  

இப்படத்தின் விசாகபட்டினம் நகரத்தின்  திரையரங்கு உரிமை மட்டும் 9.6 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions