பாகுபலி சிவடு போஸ்டரும் காப்பி ?

Bookmark and Share

பாகுபலி சிவடு போஸ்டரும் காப்பி ?

எஸ்.எஸ். ராஜமௌலி மிகவும் பிரம்மாண்டமாக இயக்கி வரும் பாகுபலி படத்தின் கதாபாத்திரத்தின் அறிமுகங்கள் மே 1ம் தேதியிலிருந்து போஸ்டர் வடிவில் வெளியிடப்பட்டு வருகின்றன. 

முதல் போஸ்டராக தண்ணீருக்குள்ளிருந்து வெளியே தெரியும் ஒரு கை, ஒரு கைக்குழந்தையைத் தாங்கிப் பிடிப்பதைப் போன்ற போஸ்டர் ஒன்றை வெளியிட்டார்கள்.

அந்த போஸ்டர் 1998ம் ஆண்டு வெளிவந்த சைமன் பிரிச் என்ற ஆங்கிலப் பட போஸ்டரின் காப்பி என உடனடியாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவின.

அடுத்து சிவடு என்ற தலைப்பிட்டு பிரபாஸ் இரண்டு கைகளில் சிவலிங்கம் ஒன்றைத் தூக்கி வருவது போன்ற போஸ்டரை வெளியிட்டார்கள். அது பேரரசு இயக்கத்தில் வெளிவந்த திருவண்ணாமலை பட போஸ்டரின் காப்பி என இரு போஸ்டர் டிசைன்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கிண்டலடித்து வருகிறார்கள்.

ஏற்கெனவே கமல்ஹாசன் உத்தம வில்லன் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்ட போதும், கௌதம் மேனன் விஜய் நடிப்பதாக இருந்த யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் போஸ்டரை வெளியிட்ட போதும் இப்படி காப்பி போஸ்டர்கள் என்ற கருத்து எழுந்தது.

சமீபத்தில் வெளிவந்த வை ராஜா வை படத்தி படத்திலிருந்து காப்பி அடித்ததோடு மட்டுமல்லாமல் அப்படத்தின் டிசைன்களைக் கூட காப்பி அடித்ததாக எழுதித் தள்ளினார்கள்.

கதையைத்தான் காப்பி அடிப்பார்கள், போஸ்டரைக் கூட காப்பி அடிப்பார்கள் என ரசிகர்கள் தங்களது கிண்டலை நிறுத்துவதாக இல்லை.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions