பாகுபலி இயக்குநரிடம் சூர்யா வேண்டுகோள்!

Bookmark and Share

பாகுபலி இயக்குநரிடம் சூர்யா வேண்டுகோள்!

பாகுபலி படம் பற்றி அதன் வளர்ச்சிபற்றி அறிய சூர்யா எப்போதுமே ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். ஒரு நாள் பாகுபலி படப்பிடிப்பு போய் பார்த்திருக்கிறார். அந்த பிரமாண்டத்தினை நேரில் கண்டு ரசித்து வியந்திருக்கிறார்.

தான் அந்த படத்தில் இருக்க மாட்டோமோ என்கிற விருப்பமும் அவருக்கு இருந்துள்ளது. எனவே ஆடியோ ட்ரெய்லர் வெளியிட ஆர்வத்துடன் சம்மதித்து பாகுபலி தமிழ் வரலாற்றில் சூர்யாவும் இடம் பெற்று விட்டார்.

விழாவில் பேசும் போது மகிழ்ச்சியாக இது பற்றி வெளிப்படையாகப் பேசினார் . பாகுபலி ரகசியம் அறிய ஆவலாக உள்ளார் சூர்யா. இதுபற்றி இயக்குநர் ராஜ மௌலியிடம் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். பாகுபலி இந்தியாவில் பிரமாண்ட முயற்சி அதில் பணியாற்றிய அனுபவமும் பரவசமும் உங்களோடு மட்டும் போய்விடக் கூடாது அது எங்களையும் சென்றடைய வேண்டும்.

உங்களுக்கு வசதியான நேரத்தில் குழுவினரோடு ஒரு சந்திப்புக்கு, அனுபவப் பகிர்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழர்கள் 8 கோடி பேரில் இன்று 70 லட்சம் பேர்தான் சினிமாவுக்கு வருகிறார்கள். மற்றவர்களையும் கவரும்படி படம் எடுக்க இது மாதிரி பகிர்வு அவசியம். நல்லவை எங்கிருந்தாலும் கற்றுக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சூர்யா பர்சனலாகவும் கூறியிருக்கிறாராம். இது பற்றி கிடைக்கிற மேடைகளிலும் குறிப்பிட்டு வருகிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions