பாகுபலி படத்தி்ன் ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபாஸ்

Bookmark and Share

பாகுபலி படத்தி்ன் ரிலீஸ் தேதியை அறிவித்த பிரபாஸ்

டோலிவுட்டில் தயாராகி வரும் சரித்திர திரைப்படமான பாகுபலியை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த எதிர்பார்ப்பை நேற்று திரைக்கு வந்த இப்படத்தின் பாடல்கள் மேலும் அதிகப்படுத்தியுள்ளன.  பாகுபலி பட பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று  திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழக மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

இவ்விழாவில்  பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர்,இயக்குநர் ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி, மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இப்படத்தின் பாடல்களை பிரபாஸின் ரசிகர்கள் வெளியிட்டனர். விழாவில் நாயகன் பிரபாஸ் பேசியபோது, இயக்குநர் ராஜமௌலி இயக்கிய ஸ்டூடண்ட் நம்பர் 1 திரைப்படம் எனக்கு பிடிக்கவில்லை. 

அப்போது ராஜமௌலி என்னை சந்தித்த போது என்னை வைத்து படம் இயக்க அவர் விருப்பபடுவதாக தெரிவித்தார். ஆனால் நான் அதை மறுத்து விட்டேன். ராஜமௌலி  இயக்கிய சிம்ஹ்ரி  படத்தின் டிரைலரை பார்க்க என்னை அழைத்தார். அதை பார்த்து மிரண்டு விட்டேன்.  

ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தின் இயக்குநர் தான் சிம்ஹ்ரி படத்தை இயக்கினார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. பின்னர் அவருடன் பணியாற்ற நான் மறுத்ததை நினைத்து வருத்தப்பட்டேன். தில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவின் போது மீண்டும் ராஜமௌலியைச் சந்திக்க நேர்ந்தது. அவருடன் சேர்ந்து பணியாற்ற விரும்பும் எனது விருப்பத்தை தெரியப்படுத்தினேன். 

எவ்வித மறுப்பும் சொல்லாமல் ராஜமௌலி  அதனை ஏற்றுக் கொண்டார். ராஜமௌலி சிறந்த மனிதர். அவருடன் நான் என் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டேன். ஆறு வருடங்களுக்கு முன்னர் இப்படத்தில் என்னை நடிக்க வைப்பதாக ராஜமௌலி கூறினார். 

அதன்படி செய்தும் விட்டார். இது போன்ற ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம். எனக்கு உறுதுணையாக இருந்த அனைவர்க்கும் நன்றி என்று கூறினார். மேலும் பாகுபலி படம் ஜூலை 10 ஆம் தேதி கண்டிப்பாக திரைக்கு வரும் என படத்தின் திரையிடும் தேதியையும் பிரபாஸ் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.  

இயக்குநர் ராஜமௌலி பேசும் போது, இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் எனக்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுத்தனர். எனது குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இல்லாமல் குறிப்பாக என் மனைவின் துணை இல்லாமல் இப்படத்தை நான் இயக்கி இருக்க முடியாது. தமன்னா கைதேர்ந்த தொழில்முறை நடிகை. அனுஷ்காவிடம் நான் இந்த கதையை கூறியதும் மிகவும் ஆர்வமாக இதில் பணியாற்ற சம்மதம் தெரிவித்தார். அந்த ஆர்வமே அவருடன் மீண்டும் மீண்டும் பணியாற்ற தூண்டுகின்றது. 

என்னுடைய வில்லன்கள் எனது கதாநாயகர்களை விட வலிமை வாய்ந்தவர்கள். பிரபாஸ் கதையின் நாயகனாக வேண்டும் என முடிவு செய்த போதே அவருக்கு சரியான வில்லனாக ரானாதான் இருப்பார் என்று தீர்மானித்தேன்.

ரானா ஒரு மென்மையான மனிதர். படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் இங்கு பணியாற்றிய அனுபவங்கள் குறித்து கடிதம் எழுதினார். அதனை படித்ததும் அவர் மேல் வைத்திருந்த மதிப்பு என்னும் அதிகரித்துவிட்டது. 

பிரபாஸ் எனது சிறந்த நண்பர். நான் கேட்டதற்கு அதிகமான தேதிகளை கொடுத்து என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். இப்படத்தின் உருவாக்கத்தில் என்னுடன் பயணித்த அதனை கலைஞர்களுக்கும் எனது நன்றி என்றார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions