பாகுபலி பாடல்கள் வெளியீட்டை தவிர்த்த நானி

Bookmark and Share

பாகுபலி பாடல்கள் வெளியீட்டை தவிர்த்த நானி

டோலிவுட்டில் முன்னணி நடிகராக  விளங்கும்  நானி  எவிடே சுப்ரமணியம் படத்தின் வெற்றிக்கு பின்னர் பலே பலே மகாதேவோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். அல்லு அரவிந்தின்  புதிய பட தயாரிப்பு நிறுவனம்  மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து பலே பலே மகாதேவோ படத்தை தயாரித்து வருகின்றன.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது நானிக்கு எதிர்பாராவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு தற்போது ஓய்வு எடுத்து வருகின்றார்.

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட சரித்திர திரைப்படமான  பாகுபலி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ் விழாவினை நடிகர் நானி தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் விழாவில் நானி கலந்து கொள்ளவில்லை. விபத்தில் சிக்கி ஓய்வு எடுத்து வருவதால் நானி இவ்விழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துள்ளார்.

இதனால் பாகுபலி பட பாடல்கள் வெளியீட்டு விழாவினை தொகுப்பாளர் சுமா தொகுத்து வழங்கினார். இதனை ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions