பாகுபலி பாடல்கள் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்

Bookmark and Share

பாகுபலி பாடல்கள் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்

ஆர்கா மீடியா ஒர்க்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் சரித்திர திரைப்படமான பாகுபலி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மே 31 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடாகி வரும் இவ்விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஐதராபாத்தில் நடைபெறவுள்ள இவ்விழாவில் டோலிவுட் பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மே மாதம் திரைக்கு வரும்  எதிர்பார்க்கப்பட்ட பாகுபலி படத்தின் இறுதிக் கட்ட பணிகள் இன்னும் முடிவடையாததால் அப்படத்தின் வெளியீடு ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்படத்தின் விஷுவல் எபெக்ட் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் இந்தியிலும் இப்படம் திரைக்கு வரவுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions